புதுடெல்லி: பிரபலமான மெசேஜிங் செயலியான Whatsapp ஒவ்வொரு ஆண்டும் அதன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், மிக முக்கியமான வேலைகளை எளிதாக செய்ய முடியும். 2020 ஆம் ஆண்டில், Whatsapp இதுபோன்ற பல அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அவை மிகவும் மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் இப்போது Whatsapp-ல் ஏதாவது கோப்பு, புகைப்படம் அல்லது வீடியோவைத் தேட விரும்பினால், அட்வான்ஸ் தேடல் அம்சத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் சில நொடிகளில் உங்களுக்கு தேவையானதை தேடிவிட முடியும்.


இந்த அம்சம் எவ்வாறு இயங்குகிறது முதலில், நீங்கள் Whatsapp-ஐத் திறக்க வேண்டும். மேற்பகுதியில், நீங்கள் ஒரு தேடல் விருப்பத்தைக் காண்பீர்கள். தேடல் விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்யும்போது, ​​புகைப்படங்கள் (Photos), வீடியோக்கள், இணைப்புகள், gif-கள், ஆடியோ மற்றும் ஆவணங்களின் 6 ஆப்ஷன்களைக் காண்பீர்கள். நீங்கள் தேட விரும்பும் ஃபைலில் கிளிக் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு புகைப்படத்தைத் தேட விரும்பினால், புகைப்பட ஆப்ஷனில் கிளிக் செய்ய வேண்டும்.


ALSO READ: Whatsapp Update: நீங்கள் இதை செய்யவில்லையெனில் உங்கள் Whatsapp a/c delete செய்யப்படும்


பெயரைக் கொண்டு தேடலாம்


இப்போது நீங்கள் Whatsapp மூலம் அனுப்பிய அல்லது பெற்ற அந்த புகைப்படங்கள் அனைத்தும் உங்கள் முன்னால் வரும். நீங்கள் சமீபத்தில் அனுப்பிய அல்லது பெற்ற புகைப்படங்கள் மேலே தோன்றும். மேலும், புகைப்படத்திற்கு மேலே மற்றொரு தேடல் விருப்பம் தோன்றும். புகைப்படத்தின் பெயரை நீங்கள் நினைவில் வைத்திருந்தால், அந்த பெயரை சர்ச் ஆப்ஷனில் உள்ளிட்ட உடனேயே அந்த புகைப்படம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் டெலீட் செய்யாத புகைப்படங்களை மட்டுமே சர்ச் செய்ய முடியும். Whatsapp-ல் இருந்து புகைப்படத்தை நீக்கிவிட்டால், தேடல் ஆப்ஷன் மூலம் அதைத் தேட முடியாது.


இதையும் செக் செய்யலாம்


இந்த அம்சத்தைத் (Whatsapp Feature) தவிர, யார் எந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார் என்பதையும் நீங்கள் காணலாம். நீங்கள் புகைப்படத் தேடலைச் செய்யும்போது, இதாற்கான ​​ஒரு ஆப்ஷன் உங்கள் முன் தோன்றும். அந்த விருப்பத்தை கிளிக் செய்தால், புகைப்படத்தையும் அதை அனுப்பிய தொடர்பின் பெயரையும் நீங்கள் காணலாம். இதிலிருந்து யார் எந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


Whatsapp-ன் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Whatsapp-ன் இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்ளின் நேரம் இதன் மூலம் மிச்சமாகும். முதலில் ஒரு புகைப்படத்தை தேட, நீங்கள் அந்த புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியவர், அல்லது நீங்கள் அந்த புகைப்படத்தை அனுப்பியவரின் சேட் பாக்சுக்கு சென்று அதன் பிறகு, அந்த புகைப்படத்தைப் பார்க்க வேண்டியிருந்தது. இப்போது இந்த வேலையை நொடிகளில் செய்து விட முடியும்.


ALSO READ: Smartphone வாங்கும் முன் இந்த அம்சத்தைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR