இந்திய சந்தையில் ஹேட்ச்பேக்  ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதில்  மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட்  மாடல் கார் (Maruti Suzuki Swift) முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில்,  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நியூ ஸ்விஃப்ட் கார் மீது பெரும் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் வாங்குபவருக்கு அதிகபட்சமாக ரூ.17,100 தள்ளுபடி கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ரூ.15,000 ரொக்க தள்ளுபடியுடன், ரூ.2,100  என்ற அளவில் நிறுவனம் அளிக்கும் கூடுதல் சலுகையையும். ஆஃபர் பலனை அனுபவிக்க தாமதிக்காமல் இன்றே கார் வாங்க புக் செய்யுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் செயல் திறன்


தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் கிடைக்கிறது. ஆனால் கூடிய விரைவில் சிஎன்ஜி இன்ஜின் கொண்ட ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாருதி ஸ்விஃப்ட் காரின் செயல்திறனை பொறுத்தவரையில் இதில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 82bhp பவர் மற்றும் 112Nm டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இதன் இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.


மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சிறப்பு அம்சங்கள்


புதுப்பிக்கப்பட்ட மாருதி ஸ்விஃப்ட்டின் கேபினில், 9-இன்ச்ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற அம்சங்களைப் உள்ளது. இது தவிர, பயணிகளின் பாதுகாப்பிற்காக, காரில் நிலையான 6-ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | மழை காலத்தில் இரு சக்கர வாகனம் பழுதாகாமல் இருக்க... செய்ய வேண்டியவை..!!


மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் மைலேஜ் விபரம்


ஸ்விஃப்ட்டின் பெட்ரோல் மேனுவல் கியர் சிஸ்டம் பயன்படுத்தும் போது லிட்டருக்கு 24.8 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது. அதேசமயம் மாருதி ஸ்விஃப்ட்டின் ஆட்டோமேட்டிக் கியர் பயன்பாட்டில் லிட்டருக்கு 25.75 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக கூறப்பட்டுள்ளது.


விற்பனையில் நம்பர் 1 கார் என்ற சாதனை படைத்த மாருதி சுசூகி மாடல்


2024 மே மாதம் புதிய ஸ்விஃப்ட் மாடலை மாருதி அறிமுகப்படுத்தியது. கடந்த 2 மாதங்களில், 35,815 புதிய மாருதி ஸ்விஃப்ட் மாடல் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதேசமயம், அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, புதிய மாருதி ஸ்விஃப்ட் நாட்டின் விற்பனையில் நம்பர் 1 கார் என்ற சாதனை படைத்தது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் தற்போது LXi, VXi, VXi(O), ZXi மற்றும் ZXi+ ஆகிய 5 வகைகளில் கிடைக்கிறது. சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸுடன் போட்டியிடும் மாருதி ஸ்விஃப்ட் காரின் எக்ஸ்ஷோரூம் விலை மாடலை பொறுத்து ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.64 லட்சம் வரை இருக்கும்.


மேலும் படிக்க | உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ! சீனாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்த முகேஷ் அம்பானி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ