இந்தியா விரைவில் 6G அறிமுகம்! 6ஜி நெட்வர்க்கின் அம்சங்கள் இது தான்!!
விரைவில் இந்தியாவில் 6 ஜி அறிமுகமாகிறது... 6 ஜி நெட்வொர்க்கின் சிறப்பம்சங்கள் மற்றும் இன்டர்நெட் வேகம்....
புதுடெல்லி: 6G இன் இணைய வேகம் 5G ஐ விட 50 மடங்கு அதிகமாக இருக்கும். இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 5 ஜி சோதனைகளை நடத்தி வருகின்றன, அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 5G சேவையின் வணிக ரீதியான அறிமுகத்திற்கு முன்னதாகவே 6G பற்றிய தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவிலும் 6G க்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 6G இன் இணைய வேகம் 5G ஐ விட 50 மடங்கு அதிக வேகமாக இருக்குமாம்!
உண்மையில், 6 ஜி நெட்வொர்க்கிற்கு அரசாங்கம் தயாராகிவிட்டது என்று கூறி சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான பொறுப்பை தொலைத்தொடர்பு துறை (Telecom Department, DoT), அரசு தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனமான C-DoTக்கு, ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
6 ஜி நெட்வொர்க் தொடர்பான அனைத்து தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளையும் ஆராய சி-டோட்டிற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read Also | Vodafone Idea அசத்தல் திட்டம்; ஜியோ-ஏர்டெல் கதறல்
6 ஜி தொடர்பான தொழில்நுட்ப வாய்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும், இதனால் உலகளாவிய சந்தையில் 6 ஜி அறிமுகம் செய்யும், அதே நேரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று தொலைத்தொடர்பு செயலாளர் கே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
5 ஜி நெட்வொர்க் வணிக ரீதியாக தென் கொரியா, சீனா மற்றும் அமெரிக்க சந்தையில் 2019 இல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது 5 ஜிக்கான ஐமுக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது 6 ஜி நெட்வொர்க்குகளில் வேலை செய்யும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. 6 ஜி நெட்வொர்க்குகளில் வேலை செய்யத் தொடங்கிய சாம்சங், எல்ஜி, ஹவாய் (Samsung, LG, Huawei) போன்ற ஜாம்பவான்களின் பெயர்கள் இதில் அடங்கும்.
2028-2030 க்குள் 6 ஜி நெட்வொர்க்குகள் உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தியாவும் 6 ஜி நெட்வொர்க்கிற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது.
Read Also | Aliens அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தினர்; மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்!
5 ஜி நெட்வொர்க், அதிகபட்சமாக 20 ஜிபிபிஎஸ் வரை தரவிறக்கம் செய்யும் வேகத்தை வழங்கும். மறுபுறம், இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க்கின் சோதனையின் போது தரவு பதிவிறக்கத்தின் அதிகபட்ச வேகம் 3.7Gbpsஐ எட்டியுள்ளது. ஏர்டெல், வி மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்கள் 5 ஜி நெட்வொர்க் சோதனைகளில் 3 ஜிபிபிஎஸ் வரை தரவிறக்கம் செய்வதற்கான வேக சோதனைகளை நடத்தியுள்ளன.
அதே வேகம் 6G நெட்வொர்க்கில் 1000Gbps ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி 6 ஜியை தொடங்குவதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளன. நிறுவனம் சமீபத்தில் ஜெர்மனியின் பெர்லினில் 6 ஜி நெட்வொர்க்கை சோதனை செய்யத் தொடங்கியது.
இந்த சோதனையின் போது 100 மீட்டர் தொலைவுக்கு அனுப்பப்பட்ட தரவு வெற்றிகரமாக திரும்ப பெறப்பட்டது. 6 ஜி நெட்வொர்க்கில், 6 ஜிபி அளவுள்ள திரைப்படத்தை வெறும் 51 வினாடிகளில் 1000 மெகாபைட் வேகத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
1G-6G நெட்வொர்க் 5G- ஐ விட 15 மடங்கு வேகமாக இருக்கும். ஜப்பானில் 6G நெட்வொர்க் 2030-க்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் 6 ஜி நெட்வொர்க்கிற்காக தொடங்கியது. 5- DW அறிக்கையின்படி, 6G நெட்வொர்க்கிற்காக ஐரோப்பிய யூனியனில் மில்லியன் கணக்கான யூரோக்கள் செலவிடப்படுகின்றன.
Also Read | சூரிய ஒளியால் சார்ஜ் ஆகும் மின்சார கார்கள்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR