பிளிப் போன்கள் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு காலம் இருந்தது. சாதாரண தொலைபேசிகள் அதிகம் பயன்படுத்தப்பட்ட கால கட்டத்தில், பிளிப் போன்கள் அறிமுகம் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்தது. இப்போது சாம்சங் நிறுவனம்  மடிக்கும் வகையிலான பிளிப் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்போது வெளிநாட்டு நிறுவனம் சோனிம் (Sonim) ஒரு சூப்பாரான தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது, . இந்த போன் தோற்றத்தில் சிறியதாக இருந்தாலும், வலிமையானது. சோனிம் எக்ஸ்பி 3 பிளஸ் (Sonim XP3plus) தொலைபேசியை டி-மொபைலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசல் XP3 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது XP3plus நிறைய புதுப்பிப்புகளுடன் தொடங்கப்பட்டது. அதன் டிஸ்ப்ளே அதிகரிக்கப்பட்டுள்ளது. இண்டர்னல்  2.8 அங்குலங்கள் மற்றும் வெளியே 1.3 அங்குலங்கள். இது இப்போது 2,300 mAh பேட்டரியுடன் வருகிறது.


ALSO READ: Amazon அதிரடி சலுகை: Samsung Galaxy M32 5G-ல் ரூ. 2000 தள்ளுபடி


Sonim XP3plus போனில் உள்ள முக்கிய அம்சங்கள்


எக்ஸ்பி 3 பிளஸ் 2.0GHz குவாட் கோர் குவால்காம் எஸ்எம் 6115 செயலி மூலம் இயக்கப்படுகிறது, அதனுடன் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபிஅதிகப்படுத்தக் கூடிய சேமிப்பு (256 ஜிபி வரை). 2,300mAh பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 மணிநேர பேச்சு நேரம் அல்லது 18 நாட்கள் ஸ்டாண்ட் பை நேரம் வரை உறுதியளிக்கிறது.


சோனிம் எக்ஸ்பி 3 பிளஸ் தண்ணீரில் விழுந்தாலும் பாதிப்பில்லை


வலுவான ஃபிளிப் போனா சோனிம் எக்ஸ்பி 3 ப்ளஸ் டிராப் ப்ரூஃப் (Drop Proof) மற்றும் நீர்ப்புகா (Water Proof) அம்சங்கள் கொண்டது, கான்கிரீட்டில் 1.5 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் போது ஒன்றும் ஆகாது. 30 நிமிடங்கள்  நீரில் இருந்தாலும் ஒன்றும் ஆகாது. 


சோனிம் XP3 பிளஸ் விலை


சோனிம் எக்ஸ்பி 3 பிளஸ் டி-மொபைல் தளத்திற்கு சென்று ஆன்லைனில் வாங்கலாம். இதன் விலை $ 210 (ரூ 15,457)  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 22 க்குள், இந்த தொலைபேசி ரீடைல் கடைகளிலும் கிடைக்கும்.


ALSO READ: Samsung ஜாக்பாட் சலுகை: Samsung Galaxy S20 FE 5G போனில் ரூ. 40,000 வரை தள்ளுபடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR