Lamborghini Aventador Ultimae: கண்ணிமைக்கும் நேரத்தில் 200 கிமீ வேகத்தை பிடிக்கும் லம்போகினி
புயல் வேகத்தில் பலரையும் கவர்ந்துள்ளல லக்போகினி அவெண்டடார் அல்டிமேட், நொடியில் 200 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடுமாம்.
Lamborghini Aventador Ultimae இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி , தங்களுடைய புதிய தயாரிப்பான Aventador-ன் சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு Lamborghini Aventador Ultimae என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 600 யூனிட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. Lamborghini Aventador LP780-4 Ultimae மாடல் கூபே மற்றும் ரோட்ஸ்டர் பாடி ஸ்டைல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை முறையே 350 மற்றும் 250 அலகுகளாக இருக்கும்.
மேலும் படிக்க | Used Cars: ரூ. 19,000-ல் கூட கார் வாங்கலாம், மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் ஆஃபர்
லம்போர்கினி அவென்டடோர் அல்டிமே செயல்திறனானது ஸ்பெக் அவென்டடோர் SVJ மற்றும் Aventador S ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய காரான Lamborghini Aventador LP780-4 Ultimae, அவென்டடோர் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த V12 எஞ்சின் மூலம் இயக்கப்படும். இது 8,500 rpm-ல் 770 Bhp மற்றும் 6,750 rpm -ல் 720 Nm உச்ச முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது. இந்த கார் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு மணிக்கு 355 கிமீ வேகத்தில் செல்லும்.
Lamborghini Aventador Ultimae வெறும் 2.8 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். கூபே பதிப்பில், இது 8.7 வினாடிகளில் 0-200 கிமீ வேகத்தை எட்டும். அவென்டடோர் எல்பி780-4 அல்டிமாவின் வடிவமைப்பு லம்போர்கினியின் வடிவமைப்பைப் போலவே உள்ளது. மேலும், செயல்திறனைப் பொறுத்தவரை, இது Aventador SVJ போலவே தெரிகிறது. அதே நேரத்தில், அதன் ஸ்டைலிங், Aventador S-ஐப் போலவே தெரிகிறது. மேலும் பிரத்தியேகமான அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நிறைய கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய முன்பக்க பம்பர், பக்கவாட்டு மற்றும் பின்புற டிஃப்பியூசர் என எல்லா இடங்களிலும் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 528 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கியா காரின் சிறப்பம்சங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR