இணைய வேகத்தில் டாப் ஸ்பீடு..! கலக்கத்தில் Jio - Airtel
இணைய வேகத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட டாப் ஸ்பீடு கொடுத்து அசத்தியிருக்கிறது ஸ்டார்ட்அப் நிறுவனமான Excitel. இதனால் இணைய வேகம் குறித்து இரு முன்னணி நிறுவனங்களும் மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா டாப்ஸ்பீடில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகளாவிய மார்க்கெட்டை ஒப்பிடும்போது, இந்தியாவின் இணைய பயன்பாடு என்பது முதன்மையான இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமானோர் செல்போன் பயன்படுத்தும் நாடுகள் பட்டியில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைய சேவை மற்றும் தொலைத்தொடர்பில் முன்னணியில் இருக்கின்றன. இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு போட்டி போட்டு சலுகைகளை அள்ளி வீசுவதால், அந்த நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
குறிபாக இணைய வேகத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பிராட் பேன்ட் சேவையில் இந்த நிறுவனங்களையும் பின்னுக் தள்ளியிருக்கிறது ஸ்டார்ட் அப் நிறுவனமான Excitel. பிராண்ட்பேன்ட் வேகம் குறித்து OOKLA என்ற நிறுவனம், டெல்லி, தெலுங்கானா, ஹைதராபாத், பெங்களூர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கான்பூர்-கர்நாடகா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் மொபைல் மற்றும் நிலையான பிராட்பேண்டிற்கான இணைய வேகம் பற்றிய டேட்டாவை வெளியிட்டிருக்கிறது.
மேலும் படிக்க | AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் இந்திய அரசு! விரைவில் வருகிறது புதிய விதி!
Excitel முதலிடம்
அதில், Excitel என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நிலையான பிராட்பேண்ட் என்று வரும்போது, இந்த நிறுவனத்தின் பெயர் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு முன் இருக்கிறது. முக்கிய நகரங்களில் 200 Mbps க்கும் அதிகமான வேகத்தை பராமரிப்பதன் மூலம் நிலையான பிராட்பேண்டில் Excitel ஆதிக்கம் செலுத்துகிறது. இது அதிகபட்சமாக முறையே 140 Mbps மற்றும் 120 Mbps வேகத்தை வழங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பாரம்பரிய தொழில் நிறுவனங்களை விட Excitel-ஐ ஒப்பிடும்போது பின்னணியிலேயே இருக்கின்றன.
ஜியோவின் ஆதிக்கம்
அதிகபட்சமாக 400Mbps வேகத்துடன் மொபைல் பிராட்பேண்ட் சந்தையில் ஜியோ ஆதிக்கம் செலுத்துகிறது. ஏர்டெல் அதிகபட்சமாக 250Mbps வேகத்தில் பின்தொடர்கிறது. ஃபிக்ஸட் பிராட்பேண்டில் உள்ள ஹோம் இன்டர்நெட் சர்வீசஸ் ஸ்டார்ட்-அப் Excitel முக்கிய நகரங்களில் 200 Mbps வேகத்தை பராமரிப்பதன் மூலம் நிலையான பிராட்பேண்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இது அதிகபட்சமாக முறையே 140Mbps மற்றும் 120Mbps வேகத்தை வழங்கும்.
மேலும் படிக்க | வாட்ஸ்அப்பால் 17 லட்சத்தை இழந்த நபர்! மோசடியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ