AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் இந்திய அரசு! விரைவில் வருகிறது புதிய விதி!

AI தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் இந்த செயற்கை நுண்ணறிவு கருவியால் மக்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 21, 2023, 02:24 PM IST
  • Chat GPT என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியாகும்.
  • Chat GPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலைகளை எளிதாக முடிக்கலாம்.
  • Chat GPT தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் இந்திய அரசு! விரைவில் வருகிறது புதிய விதி! title=

உலகம் முழுவதிலும் Chat GPT தொழில்நுட்பம் மக்களிடையே மிகவும் பிரபலமாகி பரந்து விரிந்து கிடக்கின்றது, அதிகளவிலான மக்கள் இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருகின்றனர். Chat GPT என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியாகும், இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி நமது கடினமான வேலைகளையும் எளிதாக முடித்து கொள்ளலாம்.  Chat GPT மனிதர்களின் மூளை திறனை மட்டும் கொண்டிராமல், மனித மூளையை மிஞ்சிய திறனையும் கொண்டு வேகமாக இயங்குகிறது.  உலகம் முழுவதும் அனைத்து விதமான செயற்கை நுண்ணறிவு கருவிகளும் அதிகம் விரும்பப்பட்டு தற்போது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.  மனிதர்களை மிஞ்சிய திறனை கொண்டிருப்பதால் இந்த தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏனென்றால் இந்த செயற்கை நுண்ணறிவு கருவியால் மக்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.  ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, உண்மையாகவே இந்த தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா அல்லது உதவிகரமாக இருக்குமா என்பது எதிர்காலத்தில் தான் தெரியும், எனவே இப்போதைக்கு இதைப்பற்றி யாராலும் உறுதியாக சொல்லமுடியாது.

மேலும் படிக்க | PhonePe, Paytm மூலம் தவறான நபருக்கு பணம் அனுப்பினால் திரும்பப் பெறுவது எப்படி?

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, Chat GPT உள்ளிட்ட அனைத்து வகையான செயற்கை நுண்ணறிவு தளங்களையும் அரசாங்கம் கண்காணித்தும், அவற்றை பகுப்பாய்வு செய்தும் வருகிறது.  இதனால் அவை வரும் காலங்களில் இந்தியாவில் வேலைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.  இது மட்டுமின்றி வரவிருக்கும் சில மாதங்களில், இந்திய அரசு ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பையும் உருவாகக்கூடும், இதன் மூலம் Chat GPT மற்றும் அனைத்து AI தளங்களும் வேலைவாய்ப்பில் எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை சரிபார்த்துக்கொள்ள முடியும்.  செயற்கை நுண்ணறிவு காரணமாக, இந்தியாவில் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன, ஆபத்தில் உள்ள வேலைகளின் பட்டியலில் கன்சல்டன்சி போன்ற அனைத்து வகையான வேலைகளும் அடங்கும்.  

செயற்கை நுண்ணறிவு விர்ச்சுவல் ஆங்கர்களையும் தயாரித்துள்ளது, அதைப் பயன்படுத்தி எந்தவொரு வீடியோவையும் தயாரிக்க முடியும் மற்றும் எந்தவொரு நபரின் குரலையும் பயன்படுத்த முடியும்.  இத்தகைய சூழ்நிலையில், இந்திய செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்தவிதமான சிக்கலையும் எதிர்கொள்வதில்லை என்றும், கூடிய விரைவில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்திய அரசு எந்த நேரத்திலும் ஒரு விதியைத் தயாரிக்கும் என்று நம்பப்படுகிறது.  அரசு உருவாக்கும் விதிகளின் மூலம் அந்த தளங்களை கண்காணிக்க முடியும்.

ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைக் கண்டு உலகம் வியந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றின் ஆபத்து காரணிகளின் வீரியத்தை உணரவில்லை என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்திருக்கும் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னணி டெக் ஆய்வு நிறுவனம் பல அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வில், ஏஐ தொழில்நுட்பங்களால் ஒரு நிறுவனம் பாதுகாப்பாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தகவல்கள், சென்சிட்டிவான பைல்களை ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாடு காரணமாக கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | Best Affordable Cars: ரூ. 5 லட்சத்தை விட குறைவான விலையில் கிடைக்கும் டாப் கார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News