இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். 76 வயதாகும் இவரின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரின் மரணத்திற்க்கு உலகம் முழுவதும் உள்ள பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


அந்த வகையில் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்க்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் கூறியுள்ளது.. திரு.ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம் . அவர் புகழ் வாழும். என்றும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள இரங்கல்  செய்தியில்:- விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணசெய்தி வருத்தமாக உள்ளது. நமது உலகம் மற்றும் நமது பிரபஞ்சம் ஒரு மர்மமான இடம் அவரது புத்திசாலித்தனத்தால் அறிந்து கொண்டோம். அவரது தைரியம் மற்றும் அவரது திறமை இனி வரும் தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்றார். 



பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்து உள்ளதாவது:-


பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் ஆவார். உலகெங்கிலும் உள்ள அவரது புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சியால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். அவரது இறப்பு வேதனையாக உள்ளது. பேராசிரியர் ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புகள் நம் உலகத்தை ஒரு சிறந்ததாக மாற்றியது. அவருடைய ஆத்துமா சாந்தியடையட்டும்.



மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்து உள்ளதாவது:-


பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் உலக மக்கள் அனைவரிடமும் வாழும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் தெரிவித்துள்ளார்.