புதுடெல்லி: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் விவோ (Vivo) விரைவில் அதன் X60t series இல் Vivo X60t ப்ரோவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம். இந்த புதிய தொலைபேசி தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும் இதன் சில முக்கிய அம்சங்கள் மற்றும் விலை தொடர்பான விவரங்கள் கசிந்துள்ளதாக தக்கவல்கள் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தையும் இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vivo X60t Pro ஸ்மார்ட்போன் இப்படி இருக்கும்
புதிய TENAA பட்டியலின் படி, இந்த Vivo ஸ்மார்ட்போன் வளைந்த டிஸ்ப்ளேவுடன் வரும். கேமராவைப் பற்றி பேசுகையில், அதன் பின்புறத்தில் ZEISS பிராண்டிங் மற்றும் LED ஃப்ளாஷ் கொண்ட ஒரு செவ்வக கேமராவை நீங்கள் காணலாம். பட்டியலில் காட்டப்பட்டுள்ள படங்களில் இந்த தொலைபேசியின் நிறம் நீலம் என்று தெரிகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலும் வெளியிடப்படும்.


ALSO READ: இன்று விற்பனைக்கு வரும் உயிர்ரக அம்சங்கள் கொண்ட Vivo X70 Pro+


பட்டியலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்களுடன் 6.44 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும். Dimensity 1200 சிப்செட்டில் வேலை செய்வதால், இந்த ஃபோனை 6GB, 8GB அல்லது 12GB RAM மற்றும் 64GB, 128GB மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்களில் வாங்க முடியும்.


இந்த ஃபோனில் 64MP பிரதான கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை கேமரா சென்சார் மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு 16MP முன்பக்க கேமராவும் இருக்கலாம். இதன் பேட்டரி 3,920 எம்ஏஎச் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வரலாம். இப்போது விவோ இந்த தொலைபேசியை விரைவில் அறிவிக்கும் மற்றும் அதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: அதிரடி அப்டேட்களுடன் புதிய MacBook Pro மற்றும் AirPods அறிமுகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR