BSNL Plans Under Rs 50: நாட்டில் செயல்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், விஐ (Vi), பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு சிறந்த ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுகின்றன. ஆனால் பெரும்பாலும் மக்கள் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களைத் தேடுகிறார்கள். இதன்காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தையில் தங்கள் இடத்தைப் பிடிக்க தங்கள் பயனர்களுக்கு சிறந்த மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.50க்கும் குறைவான விலையில் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலிவான பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள்: 
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், பயனர்கள் ரூ.50க்கும் குறைவான விலையில் ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விலை குறைந்த மூன்று சிறந்த திட்டங்களைப் பற்றிய தகவல்களை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம். அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ.24, ரூ.29, ரூ.49 என ரூ.50க்கும் குறைவாக உள்ளது. குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டம் வேண்டும் என நினைத்தால், இந்த சிறந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் படிக்க: சூப்பரான ரீசார்ஜ் பிளான்: வெறும் 269 ரூபாயில் எக்கச்சக்க நன்மைகள்!!


பிஎஸ்என்எல் 24 ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில், நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஒரு சிறப்பு கட்டண வவுச்சரை வழங்கியுள்ளது. உங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க இந்த வவுச்சரைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 30 நாட்களுக்கு பயன்படுத்தலாம். திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பேசுகையில், எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்பு வசதி என குரல் அழைப்புக்காக நிமிடத்திற்கு 20 பைசா கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.


பிஎஸ்என்எல் 29 ரீசார்ஜ் திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசுகையில், இரட்டை சிம் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் நல்லது. இந்த சிம் இணைய சேவை மற்றும் சில நாட்களுக்கு அழைப்பை மேற்கொள்ளவும் மிகவும் சிறந்தது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை 5 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், அதாவது இந்த திட்டம் 5 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. திட்டத்தில் கிடைக்கும் வசதியைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர் வரம்பற்ற அழைப்பு மற்றும் 1 ஜிபி டேட்டா வசதியை 5 நாட்களுக்கு பெறுகிறார்.


பிஎஸ்என்எல் 49 ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் 20 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் உள்ள வசதியைப் பற்றி நாம் பேசினால், வாடிக்கையாளர் 100 நிமிட குரல் அழைப்புகளுடன் 1 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறலாம். 


மேலும் படிக்க: ரூ.7 ரீசார்ஜ் திட்டம்...தினமும் 3 ஜிபி டேட்டா..அசர வைக்கும் BSNL


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ