லோக்பால் அமைப்பிற்கான ப்ரத்தியேக இணைய தளம் இன்று துவக்கி வைக்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல்வாதிகள், MLA-கள், உயர் அதிகாரிகள், MP-க்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் செய்தல் ஆகியவற்றை விசாரிக்க லோக் ஆயுக்தா, லோக்பால் சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.


இதனையடுத்து இந்த சட்டத்துக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடத்தது. பின்னர் அதே மாதம் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனினும், இதுவரை தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தவில்லை.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின், லோக்பால் அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.சி.கோஷ் உள்ளிட்ட 8 உறுப்பினர்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மார்ச் மாதம் நியமி்த்தார்.


இந்நிலையில் லோக்பால் அமைப்பிற்கான ப்ரத்தியேள இணையதளம் இன்று துவக்கப்பட்டது. இதற்கான விழாவில் லோக்பால் அமைப்பின் தலைவர் பினாகி சந்திரகோஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.