சந்திர கிரகணம் இன்று இரவு விண்ணில் தென்பட உள்ளது. இந்த சந்திர கிரகணமானது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாகும். இது 103 நிமிடங்கள் நீடிக்கும். இதைப் பார்வையிட சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கிரகணத்தின் போது நிலவின் வெளிச்சம் குன்றி, சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். கடந்த ஜனவரி 31ம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து நாளை ஏற்படவுள்ளது. இது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக, 103 நிமிடங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கிரகணம், கெய்ரோவில் இரவு 9.30 மணிக்கு தென்படும். மாஸ்கோவில் இரவு 10.30 மணிக்கும், டெல்லியில் இரவு 10.44 மணிக்கும் தெரியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 


இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்னர் முழு கிரகணம் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.43 மணிக்கு முடியும். தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடையும். இந்த முழு சந்திர கிரகணம் மொத்தம் 102 நிமிஷங்கள் நிகழ உள்ளது. இது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆகும். இதனை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு விளையாது.


மேலும், புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது. அடுத்து இதே போன்றதொரு நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ம் தேதி நிகழும். அதுவும் 103 நிமிடங்கள் நீடிக்கும்.