கேரளா வெள்ளத்திற்கு முன் எப்படி இருந்தது, வெள்ளத்திற்கு பின் எப்படி இருந்தது என அறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நாசா....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 320 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் தங்களின் வீடுகளை இழந்து அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.


இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கேரளா வெள்ளத்திற்கு முன்பு எப்படி இருந்தது, தற்போது எப்படி இருக்கிறது என தனது செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள முதல் புகைபடம் பிப்ரவரி 6 ஆம் தேதி 2018 அன்று எடுக்கப்பட்டது. இரண்டாவது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 2018-ல் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 


நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெள்ளபெருக்கு ஏற்பட்ட தளங்களான கோட்டயம், ஆலப்புழா, அம்பலப்புழா, சந்கனச்செரி, திருவல்லா, வேம்பநாடு ஏரி ஆகியபகுதிகளை குறிப்பிட்டு காட்டியுள்ளது. 


நாசா வெளியிட்ட இரண்டு படங்களில் ஒரு வெளிப்படையான வேறுபாடு காணப்படலாம், பிப்ரவரி 6 ஆம் தேதி எடுக்கப்பட்ட பிகைப்படத்தில் நீர் நிலைகளை தவிர அனைத்து பகுதிகளும் பசுமைவைந்ததாக காணப்படுகிறது. இரண்டாவது புகைப்படத்தில் வெள்ளப்பெருக்கு கொதிப்பைக் கொடுக்கும். இருண்ட நீல நிறத்தில் குறிப்பிடப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதை காட்டுகின்றது.



இதற்க்கு முன்னதாக, மழையின் தீவிரத்தன்மையைக் காட்டிய ஒரு வீடியோவை நாசா வெளியிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிலை, இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் மழைப்பொழிவை அதிகரிக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..!