பயன்படுத்திய காரை வாங்குவது எளிதான காரியம் அல்ல. இதில் பல குழப்பங்கள் உள்ளன. பயன்படுத்திய காரை வாங்கும் போது, ​​அந்த கார் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும்? உள்ளிட்ட பல கேள்விகள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். திடீரென செலவு வைத்துவிடுமோ? என்ற அச்சமெல்லாம் கூட இருக்கும். இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சந்தையில் எப்போதும் மவுசு அதிகமாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலர் புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க ஆர்வம் அதிகம் காட்டுகின்றனர். அதனால் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சில பயன்படுத்திய கார்கள் பற்றிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | செகணட் கார் வாங்கும் முன் கவனத்தில் வைக்க வேண்டிய 6 விஷயங்கள்


மாருதி 800 எஸ்டிடி


மாருதி 800 எஸ்டிடி கார் 35000 ரூபாய் விலையில் கிடைக்கிறது. பழைய மாடல் காராக இருந்தாலும், பெட்ரோல் என்ஜின் கொண்ட இந்த காருக்கு மார்க்கெட்டில் வரவேற்பு இருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த காரை வாங்குவதற்கு இணையம் மூலம் அதிகம் பேர் தேடியுள்ளனர். பயன்படுத்தப்பட்ட காராக இருந்தாலும், வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மக்கள் விரும்புகின்றனர். 2011 மாடல் இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


மாருதி ஆல்டோ எல்எக்ஸ்ஐ


மாருதி நிறுவனத்தின் மற்றொரு கார் மாருதி ஆல்டோ எல்எக்ஸ்ஐ. பயன்படுத்தப்பட்ட இந்த கார்கள் அதிகபட்சம் 46 ரூபாய் வரை செகண்ட் ஹேண்ட் வேல்யூ இருக்கிறது. அதாவது காரின் கி.மீ மற்றும் தரம் பொறுத்து இந்த விலையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். என்ஜின் மற்றும் இதர பாகங்களைக் கருத்தில் கொண்டு வாங்குவது குறித்து நீங்கள் முடிவெடுக்கலாம். 


மாருதி ஆல்டோ எல்எக்ஸ்ஐ


மாருதி ஆல்டோ எல்எக்ஸ்ஐ காரின் 2009 மாடல் தற்போது 49,000 விலையில் கிடைக்கிறது. குறைவான விலையில் கிடைக்கும் செகணட் கார்களில் இதுவும் ஒன்று. நடுத்தர மக்கள் அல்லது வீட்டு உபயோகத்துக்கு வேண்டும் என நினைக்ககூடியவர்கள் இந்த காரை அதிகளவில் வாங்க விரும்பம் தெரிவிக்கின்றனர். செகணட் கார்களைப் பொறுத்தவரை என்ஜினில் கவனம் செலுத்த வேண்டும். சரியாக இருக்கும்பட்சத்தில் வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.  


மேலும் படிக்க | மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஜூலை 20ம் தேதி அறிமுகம்: விலை ரூ 15 லட்சம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ