Maruti Jimny 5 Door Launch: இந்த ஆண்டின் இறுதி விற்பனையை படு ஜோராக முடிக்க திட்டமிட்டிருக்கும் மாருதி, அடுத்த ஆண்டை தடபுடலாக வரவேற்கவும் தயாராகிவிட்டது. அதற்காக மாருதி ஜிம்னி மற்றும் பலேனோ கிராஸ் ஆகிய இரண்டு மாடல்களை மார்க்கெட்டில் களமிறக்க வெயிட்டிங்கில் உள்ளது. இரண்டு வாகனங்களும் மார்க்கெட்டுக்கு வரும் தேதி மற்றும் விவரங்கள் இப்போது வெளியாகியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாருதியின் புதிய பிளான் 


2022 ஆம் ஆண்டை பொறுத்தவரை மாருதி பல வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Baleno முதல் Brezza மற்றும் XL6 வரை அனைத்து கார்களையும் புதிய அவதாரங்களில் களமிறக்கி, வாடிக்கையாளர்களின் அபிமானத்தை பெற்றது. கிராண்ட் விட்டாரா கார், வடிவில் முற்றிலும் மாறி புதிய காராக சந்தைக்கு வந்திறங்கியது. அதேபோல், 2023 ஆம் ஆண்டு படு அமர்களமாக இருக்க வேண்டும் என மாருதி பக்காவாக ஸ்கெட்ச் போட்டுள்ளது. அதற்காக மாருதி ஜிம்னி மற்றும் பலேனோ கிராஸ் இரண்டு மாடல்களையும் மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. 


மேலும் படிக்க | ரூ10000 ஸ்பெஷல் ஆஃபருடன் ஓலா ஸ்கூட்டரை 'இலவசமாக' வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்


மாருதி சுசுகி ஜிம்னி 5-கதவு


லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, மாருதி நிறுவனம் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவியை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறது. அறிமுகத்துக்குப் பின்னர் மார்க்கெட்டுக்கு ஆகஸ்ட் 2023-ல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்னி 5-டோர் மாடல் கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும். மஹிந்திரா தார் (3-கதவு)-ஐ விட மலிவானதாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


பலேனோ எஸ்யூவி


மாருதி தனது பலேனோ அடிப்படையிலான எஸ்யூவியை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏப்ரல் 2023-ல் மாருதி YTB அல்லது பலேனோ அடிப்படையிலான SUV கூபேவை அறிமுகப்படுத்தலாம். இது நிறுவனத்தின் HEARTECT தளத்தை அடிப்படையாகக் கொண்டது. புதிய பலேனோ எஸ்யூவி, வென்யூ, சோனெட் மற்றும் எக்ஸ்யூவி300 போன்ற வாகனங்களுடன் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் 


மாருதி புதிய எம்பிவி


மாருதி சுஸுகி நிறுவனம் புதிய MPV மாடலையும் அறிமுகம் செய்யும் என்றும், இது டொயோட்டாவுடன் இணைந்து கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்திய சந்தையில் மாருதியின் விலையுயர்ந்த தயாரிப்பு இதுவாக இருக்கலாம்.


மேலும் படிக்க | ரூ.1 லட்சம் தள்ளுபடி விலையில் ஸ்கோடா கார்! வோல்ஸ்வேகன்-ம் அதிரடி விலை குறைப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ