ஆப்பிள் ஐபோன் 14 டீல்: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! ஆப்பிள் ஐபோன் 14 இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள போன் ஆகும். இதில் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்பு உள்ளதால் பயனர்களுக்கு இது மிகவும் பிடித்த ஐபோனாக உள்ளது. இது ஐபோன் 13 போல தோற்றமளிக்கிறது. எனினும் இது மிகவும் வித்தியாசமானதான மற்றும் ஒரு சக்திவாய்ந்த கேமராவையும் சக்திவாய்ந்த ப்ராசசரையும் கொண்டுள்ளது. இப்போது இந்த ஐபோன் குறித்த ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஐபோன் மாடலை மிகவும் மலிவு விலையில் வாங்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விலையில் இந்த அற்புதமான ஐபோனை வாங்கலாம். நம்ப முடியாமல் இருந்தாலும் இது உண்மைதான். இந்த சலுகையின் விவரங்களை இந்த பதிவில் காணலாம். 


இந்த தள்ளுபடி எங்கு கிடைக்கிறது


ஐபோன் 14 -ல் கிடைக்கும் தள்ளுபடி ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் வழங்கப்படுகின்றது. இந்த தள்ளுபடி மிகவும் வலுவான தள்ளுபடியாக பார்க்கப்படுகின்றது. இந்த விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் சேமித்து குறைந்த விலையில் இந்த ஐபோனை வாங்க முடியும். ஐபோன் 14 இன் உண்மையான விலை ரூ.79,900 ஆகும். இருப்பினும், பிளிப்கார்ட்டில் இதற்கு 11% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வாடிக்கையாளர்கள் இதை வெறும் 70,999 ரூபாய்க்கு வாங்க முடியும். எனினும், பலருக்கு இந்த விலையும் அதிகமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் வாடிக்கையாளர்கள் இந்த ஐபோனை இன்னும் குறைந்த விலையில் வாங்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அதை பற்றி இங்கே காணலாம். 


மேலும் படிக்க | WhatsApp சீக்ரெட்ஸை நீங்கள் பாதுகாக்க செட்டிங்ஸில் இருக்கும் 9 பிரைவசி அம்சங்கள்


இந்த ஐபோன் மாடலை வாங்கும்போது, ​​வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து தள்ளுபடியைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 14 (ப்ளூ, 128 ஜிபி) வாங்குவதற்கு பிளிப்கார்ட்டில் ரூ.37,999 தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த தள்ளுபடி, அதிக விலை காரணமாக இந்த போனை வாங்குவதில் தயக்கம் காட்டும் வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த விலையுயர்ந்த போனை வெறும் 33,000 ரூபாய்க்கு வாங்கிச் செல்லலாம். 


கூடுதல் தகவல்


ஐபோன் 13-ல் சலுகை


பிளிப்கார்ட்டில் ஒரு அற்புதமான டீலின் மூலம்  ஐபோன் 13-ஐ வாடிக்கையாளர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். இந்தச் சலுகையில், மிகக் குறைந்த விலையில் ஒரு சிறந்த போனை நீங்கள் வாங்க முடியும். இந்த டீலின் முழு விவரம் பற்றி காணலாம். 


APPLE iPhone 13: இதில் கிடைக்கின்றன அசத்தலான சலுகைகள்


ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த ஃபிளாக்ஷிப் ஐபோனை சிறப்புச் சலுகைகளுடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஐபோன் 13 ரூ. 69,900 -க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிக்குப் பிறகு, இந்த ஐபோனின் விலை ரூ. 60,999 ஆக குறைகிறது. இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம். இதை தவிர, இந்த டீலில் 5 சதவீத கேஷ்பேக் மற்றும் பல வங்கிச் சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 


ஐபோனில் இஎம்ஐ சலுகை


இது தவிர, அதே நேரத்தில், ஐபோன் 13 ஐ மாதத்திற்கு ரூ. 2,542 இஎம்ஐ -இல் வாங்கலாம். இதுதவிர ரூ. 38,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், அதாவது பரிமாற்ற சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் மூலம் உங்கள் பழைய போனை கொடுத்து, அதற்கு பதிலாக புதிய போனின் விலையை குறைக்கலாம். ஆனால் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்த, நீங்கள் இணையதளத்தின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த டீல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கக்கூடும் என்பதையும் வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த டீல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் அல்லது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மூடப்படலாம்.


மேலும் படிக்க | ரியல் மீ அறிமுகப்படுத்தும் சூப்பர் கேமிங் ஸ்மார்ட்போன் விலை மற்றும் அம்சங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ