Mercedes-Maybach GLS 600: மெர்சிடிஸ்-மேபக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர எஸ்யுவி மாடல் ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 (Mercedes-Maybach GLS 600) எஸ்யூவி இந்தியாவில் ஜூன் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பான மிக விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மிகவும் உயரிய வகை சொகுசு எஸ்யூவி (Luxury SUV Car) சந்தையில் மெர்சிடிஸ் - மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவி (Mercedes-Maybach GLS 600) பெரும் கோடீஸ்வர்களின் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த உயர்வகை சொகுசு எஸ்யூவி கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் GLS600 மெர்சிடிஸ் மேபக் சீரிசில் முதல் எஸ்யுவி மாடல் ஆகும்.
ALSO READ | புதிய கார்களில் 3 லட்சம் வரை பம்பர் தள்ளுபடி: அதிக சலுகை உள்ள கார்களின் பட்டியல் இதோ
இந்நிலையில் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் இந்தியாவில் அடுத்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டது. இந்த சூழலில், மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ள தேதியை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது வீடியோ ஒன்றின் மூலமாக உறுதி செய்துள்ளது. இதன்படி வரும் ஜூன் 8ம் தேதி இந்த கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த எஸ்யூவிக்கு இந்தியாவில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த காரின் நீளம் 5,205 மிமீ. அகலம் 2,030 மிமீ. உயரம் 1,838 மிமீ ஆகும். அதே சமயம் இந்த காரின் வீல்பேஸ் 3,135 மிமீ ஆகும். அதே நேரத்தில் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவி காரில், ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.
இது 4.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் ஆகும். இதனுடன் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த பவர் அவுட்புட் 558 ஹெச்பி மற்றும் 730 என்எம் டார்க் திறன் ஆகும். இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் சொகுசு எஸ்யூவியின் விலை 2 கோடி ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம்) நெருக்கமாக நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR