மென்பொருள் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் "Emoji8" என்ற புதிய பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனர்களின் முகப்பாவங்களை நிகழ்நேரத்தில் ஒப்பிட்டு பயனாளர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய எமோஜி என்னும் முகப்பாவங்களை வழங்குகிறது.


‘Windows Machine Learning (ML)’ தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த "Emoji8" குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவின் படி இந்த "Emoji8" ஆனது பயனர்களின் முகப்பாவங்களை படம்பிடித்து, ஒப்பிட்டு ஸ்மைலீஸ் எனப்படும் குறும்படங்களை வழங்குகிறது. மேலும் இந்த பயன்பாட்டை கொண்டு பயனர்கள் இணைய இணைப்பு இல்லா சமையத்திலும் விளையாடலாம் என குறிப்பிட்டுள்ளது.


Image Source : www.microsoft.com/

Microsoft Store-ல் இலவசமாக கிடைக்கும் இந்த "Emoji8" ஆனது தற்போது Windows 10 வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் எனவும், மற்ற பதிப்பு பயனர்களுக்க விரைவில் மேம்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


"எளிய மற்றும் மாயாஜால அனுபவங்களை உருவாக்குவதற்கு Windows ML API களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு இந்த பயன்பாட்டை நீங்கள் ஒரு பெரிய உதாரணமாக எடுத்துக்கொள்லாம்" என மைக்ரோசாப்ட் இயக்குநர் மெக்காய் குறிப்பிட்டுள்ளார்.


"Emoji8" பயனர்கள், இந்த பயண்பாட்டினை கொண்டு வரும் மதிப்பெண் புகைப்படங்களையும் பயன்படுத்தி GIF புகைப்படங்களை உருவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.