அவுட்லுக் லைட் செயலியுடன் கூடிய பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்
Microsoft Outlook Lite app: மைக்ரோசாப்ட் அவுட்லுக் லைட் செயலியானது 1ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும்; இதை இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவிறக்கம் செய்யலாம்
புதுடெல்லி: மைக்ரோசாப்ட் அவுட்லுக் லைட் செயலியானது 1ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும்; இதை இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த வசதியை மைக்ரோசாப்ட் அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய 5 எம்பி டேட்டா மட்டுமே செலவாகும். இதுஅனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், 1ஜிபி ரேம் உள்ளவைகளில் கூட இயங்குவதற்கு உகந்ததாக இருக்கும். மைக்ரோசாப்ட் தனது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அவுட்லுக் லைட் செயலி , எந்தவிதமான அம்சங்களிலும் சமரசம் செய்யாமல் குறைந்த பேட்டரி மற்றும் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி, மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கின் முக்கிய அம்சங்களை சிறிய அளவிலான செயலியில் கொண்டு வருவதாகவும், எந்த நெட்வொர்க்கிலும் இலகுரக சாதனங்களுக்கான வேகமான செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
குறைந்த பேட்டரி மற்றும் சேமிப்பக இடத்தைப் பயன்படுத்துவதோடு, மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் லைட் செயலி, உலகளவில் 2G மற்றும் 3G நெட்வொர்க்குகள் உட்பட அனைத்து நெட்வொர்க்குகளிலும் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பவர் பேங்க் தேர்வு செய்வதில் குழப்பமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்
இது வெறும் 1ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களில் வேலை செய்யும் திறனுடன் இணைந்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரூ.5,000க்கு கீழ் உள்ள ஃபீச்சர் போன்களுக்கு ஆப்ஸை சிறந்ததாக ஆக்குகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Outlook Lite பயன்பாடு Outlook.com, Hotmail, Live, MSN, Microsoft 365 மற்றும் Microsoft Exchange ஆன்லைன் கணக்குகளையும் ஆதரிக்கிறது. இது செயலியின் பரந்த பயன்பாட்டை செயல்படுத்துகிறது.
Microsoft Outlook Lite செயலி எங்கெல்லாம் கிடைக்கும்?
அர்ஜென்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வடார், இந்தியா, மெக்சிகோ, பெரு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தைவான், தாய்லாந்து, துருக்கி, வெனிசுலா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக அவுட்லுக் லைட் செயலியை பதிவிறக்கம் செய்யலாம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Cyber Insurance: சைபர் மோசடிகளுக்கு உதவும் சைபர் இன்சூரன்ஸ்
எதிர்காலத்தில் இந்த செயலி, பிற நாடுகளுக்கும் விரிவாக்கப்படும். பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான 'லைட்' செயலியை வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் இதற்கு முன்னரே அறிமுகப்படுத்தியுள்ளன.
குறைந்த நெட்வொர்க் இணைப்பு உள்ள பகுதிகளில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக இலகுரக பதிப்புகளை சில தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
கூகுள் அசிஸ்டண்ட் கோ, ஜிமெயில் கோ, கூகுள் கேலரி கோ, கூகுள் மேப்ஸ் கோ, கூகுள் கோ போன்ற செயலிகள் குறைந்த பட்ஜெட் ஆண்ட்ராய்டு போன்களுக்கானவை. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு கோ எடிஷன் இயங்குதளத்தையும் கொண்டுள்ளது.
மறுபுறம், Meta, Instagram Lite, Facebook Lite மற்றும் Messenger Lite, Twitter, Spotify மற்றும் Uber ஆகியவை அவற்றின் செயலிகளின் லைட் பதிப்பை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பல் துலக்க பயன்படும் ரோபோ: விரைவில் உங்கள் பயன்பாட்டுக்கு வரும் மைக்ரோபேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ