பள்ளிக்கல்வித் துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையத்தில் துணை மின் நிலையத்தை திறந்து வைத்த அவர் இந்த தகவலை தெரியபடுத்தியுள்ளார்.



பள்ளிக்கல்வித்துறைக்கென உருவாக்கப்படும் இந்த தொலைக்காட்சி சேனலில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் எனவும், தனி ஸ்டூடியோ உருவாக்கப்பட்டு சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


தற்போது தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் TN SCERT என்னும் Youtube சேனல் செயல்பட்டு வருகிறது. இந்த சேனலில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பாடதிட்டத்தில் உள்ள பாடப்புத்தக தகவல்கள் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எளிய வழியில் குழந்தைகள் தங்களது பாடங்களை புரிந்துக்கொள்ள இந்த வீடியோக்கள் உதவி வருகின்றன. சுமார் 2,884 வீடியோக்களை கொண்டுள்ள இந்த சேனல் பள்ளி குழந்தைகளுக்கு பெருமளவில் உதவி வருகின்றது.


இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித் துறைக்கென தனி சேனல் உருவாக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது!