தற்போதையை அதிக வேக இண்டர்நெட் உலகத்தில், இணைய வேகம் குறைவாக இருந்தால், அது பெரும் பிரச்சனையாக ஆகி விடும். சமூக ஊடகங்களில் பதிவிடுதல், தகவல்களை பகிர்தல், யூடியூப், நெட்ஃபிக்ஸ் அல்லது ஹாட்ஸ்டாரில் வீடியோக்களை பார்த்தல் ஆகியவற்றின் போது சிறந்த அனுபவத்தை பெற  இண்டர்நெட் ஸ்பீட் என்னும் இணைய வேகம் சிறப்பாக இருக்க வேண்டும். இந்நிலையில், மொபைல் இணைய வேகத்தை மேம்படுத்த சில சிறந்த எளிய வழிகள் உள்ளன. மொபைலின் செட்டிங்ஸில் சில மாற்றங்களைச் செய்தால் போதும், சிறப்பான இணைய வேகத்தை பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலும், உங்கள் சாதனம் மெதுவான நெட்வொர்க் அலைவரிசையைப் பிடிக்கும் போது, உங்கள் இணைய வேகம் குறைவாக இருக்கும். நெட்வொர்க் வழங்குநர்கள் 4G மற்றும் 3G ஆகிய இரு வகை இணையத்தைப் பயன்படுத்தும்  மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வெவ்வேறு அலைவரிசைகளை வெளியிடுகின்றனர். அதாவது LTE மற்றும் VoLTE ஆகியவையும் ஒரே நேரத்தில் கடத்தப்படுகின்றன. சில சமயங்களில், இணையத்தின் அதிக அலைவரிசையை நீங்கள் அணுக முடியாமல் போகும் போது,  உங்கள் தொலைபேசி தானாகவே குறைந்த அலைவரிசைக்கு மாறிவிடும். நீங்கள் இணைய வசதியை பெற தடங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செட்டிங்க் செய்யப்பட்டுள்ளது.


இருப்பினும், சில நேரங்களில் நெட்வொர்க் தானாகவே அதிக அலைவரிசையை எடுக்காது. இந்நிலையில், உங்கள் மொபைல் இணைய வேகத்தை அதிகரிக்க உங்கள் நெட்வொர்க் அமைப்பை மீட்டமைக்க முடியும். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். நீங்கள் செய்ய வேண்டியது ஆட்டோமேடிக் மோட் என்பதை அணைத்து, உங்கள் நெட்வொர்க் ப்ரொவைடரை மேனுவல் முறைக்கு மாற்றவும்.


உங்கள் நெட்வொர்க் செட்டிங்குகளை மீட்டமைக்கவும்


செயல்முறை 1: செட்டிங்  செல்லவும்.


செயல்முறை 2: பின்னர் மொபைல் நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து டாப் செய்யவும்.


செயல்முறை 3: நெட்வொர்க் ப்ரொவைடர் ஆப்ஷனை தேடி, அதைத் தட்டவும்.


செயல்முறை 4: 'செலக்ட் ஆட்டோமேடிக்' என்பதைத் தட்டவும்


செயல்முறை 5:  பின்னர் அதனை ஆப் செய்யவும்.


மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்


அதன் பிறகு, உங்கள் நெட்வொர்க் வழங்குநரை (வோடாஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ அல்லது ஏர்டெல்) மேனுவல் முறையில்  தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும், அவ்வளவுதான். உங்கள் இணைய வேகம் அதிகரிக்கும். இதற்கு உங்கள் போனில் 4G அல்லது LTE நெட்வொர்க்கை செட் செய்ய வேண்டும்.


4G அல்லது LTE நெட்வொர்க்கை எவ்வாறு தேர்வு செய்வது:


செயல்முறை 1: செட்டிங் செல்லவும்.


செயல்முறை 2: அதன் பிறகு கனெக்‌ஷனுக்கு செல்லவும்.


செயல்முறை 3: சிம் கார்டு மேனேஜர் ஆப்ஷனை கண்டறியவும்.


செயல்முறை 4: மொபைல் டேட்டா அல்லது மொபைல் நெட்வொர்க்கிற்குச் செல்லவும்.


செயல்முறை 5: LTE/3G/2G (ஆட்டோ கனெக்ட்) மீது தட்டவும்.


செயல்முறை 6: எக்ஸிட் செட்டிங்கை டாப் செய்யவும்.


மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR