ஸ்மார்ட்போன் சார்ஜ் போடும் போது ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க..!!
ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை அதன் பேட்டரி. ஸ்மார்ட்போனின் பேட்டரி விரைவில் சேதமடைவதாக பலர் அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் செய்யும் தவறின் விளைவு தான் அது என்று பலருக்குத் தெரியாது.
ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை அதன் பேட்டரி. ஸ்மார்ட்போனின் பேட்டரி விரைவில் சேதமடைவதாக பலர் அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் செய்யும் தவறின் விளைவு தான் அது என்று பலருக்குத் தெரியாது. இதனால் அவரது ஸ்மார்ட்போன் விரைவில் பழுதடைகிறது.
நீங்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவராக இருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், உங்கள் விலைமதிப்பற்ற ஸ்மார்ட்போன் விரைவில் பழுதடைந்து, அதை சரிசெய்ய ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்ய நேரிடலாம்.
20% முதல் 80% வரை மட்டுமே சார்ஜ் இருக்க வேண்டும்
ஸ்மார்ட்போன் பேட்டரியை எப்போதும் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்து வைத்திருப்பது நல்லது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். முற்றிலும் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை ஏற்படுவதையும், முழுமையாக சார்ஜ் செய்வதையும் தவிர்க்கவும். ஏனெனில் இது பேட்டரி ஆயுளைக் குறைக்கலாம்.
இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்
நீண்ட நேரம் சார்ஜ் செய்வதால் பேட்டரி வெப்பமடைவதால் அதன் திறன் குறையும். பெரும்பாலான நவீன ஸ்மார்ட்போன்கள் அதிக சார்ஜ் செய்வது தொடர்பான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அது ஒரு பழக்கமாக மாறக்கூடாது.
துரித சார்ஜிங் பயன்பாடு
துரிதமாக சார்ஜ் செய்வது வசதியானது தான். ஆனால் எப்போதும் அந்த முறையை கடைபிடிப்பது பேட்டரியில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். முடிந்தவரை சாதாரண சார்ஜிங்கைப் பயன்படுத்தவும். மேலும், சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போனை குளிர்ந்த இடத்தில் வைக்கவும். வெப்பம் பேட்டரி ஆயுளைக் குறைக்கிறது. சார்ஜ் செய்யும் போது, ஸ்மார்போனை பயன்படுத்துவதை தவிர்க்கவும், போன் பேசுதல், கேமிங் போன்றவற்றை தவிர்க்கவும்.
ஒரிஜினல் சார்ஜரைப் பயன்படுத்தவும்
உங்கள் மொபைலின் ஒரிஜினல் சார்ஜரை எப்போதும் பயன்படுத்தவும். தவறான சார்ஜரைப் பயன்படுத்துவது பேட்டரியை சேதப்படுத்தும். மேலும், பேட்டரி சுழற்சிகள் சார்ஜ்-டிஸ்சார்ஜ் சுழற்சிகளாகும். எடுத்துக்காட்டாக, 100% முதல் 0% வரை ஒரு முழுமையான சுழற்சி. பேட்டரி ஆயுள் சுழற்சிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, பேட்டரி சுழற்சிகளை நிர்வகிக்க முயற்சிக்கவும்.
ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் போடும் போது பேக் கேஸை கழட்டிவிட்டு சார்ஜ் போடுவது நல்லது. சார்ஜ் செய்யும் போது உங்கள் பேட்டரி வெப்பமடையும். அந்த சமயத்தில் பேக் கேஸ் வெப்பத்தை வெளியேற விடாமல் தடுக்கிறது. இதனால் பேட்டரி சேதமடைய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | எக்கச்சக்க ஆப்பர்களில் கிடைக்கும் OnePlus மொபைல்கள்... எங்கு, எப்போது வாங்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ