21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கும்

மத்திய டெலிகாம் அமைச்சகம் மொபைல் எண்களை மாற்றுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இனி மொபைல் நம்பர்கள் எல்லாம் 10 நம்பர்களுக்கு மேல் இருக்கும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் வருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 8, 2024, 06:54 AM IST
  • இந்தியாவில் மொபைல் நம்பர் மாறப்போகுது
  • தொடர்ந்து அதிகரிக்கும் யூசர்களின் எண்ணிக்கை
  • இனி 10 நம்பர்களுக்கும் மேல் தான் இருக்கும்
21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கும் title=

இந்தியாவில் டெலிகாம் துறை அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா என மொபைல் சேவை வழங்குநர்கள் அனைவரும் இப்போது 5ஜி நெட்வொர்கை நோக்கி நகர தொடங்கிவிட்டனர். பெரும்பாலான நகரங்களில் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கவே தொடங்கிவிட்டது. அதனால், டெலிகாம் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தள்ளப்பட்டிருக்கிறது. இதனால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அண்மைக்காலமாக பெரிய முடிவுகளை எடுத்து வருகிறது. தற்போது அப்படியான ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சிம் வேணுமா... 90 நிமிடங்களில் டோர் டெலிவரி... ஆர்டர் போடுவது எப்படி?

 5G நெட்வொர்க் வந்த பிறகு, மொபைல் எண் தொடர்பான சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாக தேசிய எண்ணிடல் திட்டத்தை TRAI திருத்த முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு இதேபோன்ற முடிவு எடுக்கப்பட்டது. அதிகரித்து வரும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையால், மொபைல் நிறுவனங்களுக்கு புதிய சவால் எழுந்துள்ளது. சேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கென தனி எண்ணை இடுவது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தேசிய எண்ணிடுதல் திட்டத்தின் கீழ் தற்போது மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்போது என்ன சவால்?

நாடு முழுவதும் உள்ள 750 மில்லியன் தொலைபேசி இணைப்புகளுக்கு 2003 ஆம் ஆண்டில் Numbering resource ஒதுக்கப்பட்டது. அதேசமயம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, Numbering resource ஆபத்தில் உள்ளது. நெட்வொர்க் வழங்குநர்கள் தொடர்ந்து தங்கள் சேவைகளை மாற்றுவதால், இதன் காரணமாக இணைப்புகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, மார்ச் 31 ஆம் தேதி வரை இது சுமார் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக TRAI தனது இணையதளத்தையும் புதுப்பித்து, அனைவரிடமும் ஆலோசனை கேட்டுள்ளது. ஏனெனில் நீண்ட காலத்திற்குப் பிறகு தேசிய எண்ணிடுதல் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எழுத்துப்பூர்வமாகவும் ஆலோசனை வழங்கலாம். இப்போது மொபைல் எண்களின் எண்ணிக்கையை 10ல் இருந்து அதிகரிக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது. 11ல் இருந்து 13 எண்கள் வரை உருவாக்கலாம் என பெரும்பாலானோர் ஆலோசனை கூறுகின்றனர். இது பயனர்களை அடையாளம் காண பெரிதும் உதவும் என அனுமானிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மே மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்கள் எவ்வளவு தெரியுமா...? டாப் 5 நிறுவனங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News