மாருதி சுஸுகி பலேனோ: இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார்களுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. இந்த பிரிவில் பல்வேறு பிராண்டுகளில் இருந்து ஏராளமான மாடல்கள் கிடைக்கின்றன. ஆனால் சில காலங்களாக ஒரு மாடலுக்கு இந்த பிரிவில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன? பல வாடிக்கையாளர்கள் இங்க காரை விரும்பும் அளவு அப்படி இதில் என்ன உள்ளது? இந்த காரைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Maruti Suzuki Baleno:மாறுபாடுகள் மற்றும் வண்ணங்கள்


மாருதி சுஸுகி பலேனோ சிக்மா, டெல்டா, ஸீட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வகைகளில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சந்தையில் மொத்தம் 6 மோனோடோன் வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் நெக்சா ப்ளூ, பர்ள் ஆர்டிக் வைட், கிராண்ட்டியூர் கிரே, ஸ்ப்ளெண்டிட் சில்வர், ஓபுலண்ட் ரெட், லக்ஸ் பீஜ் மற்றும் பர்ள் மிட்நைட் பிளாக் ஆகிய வண்ணங்கள் உள்ளன.


Maruti Suzuki Baleno: டைமென்ஷன்


இந்த கார் 3,990 மிமீ நீளமும், 1,745 மிமீ அகலமும், 1,500 மிமீ உயரமும் கொண்டது. பெட்ரோல் வேரியண்டில் 318 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் சிஎன்ஜி வேரியண்டில் 55 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கும்.


Maruti Suzuki Baleno: எஞ்சின் மற்றும் மைலேஜ்


பலேனோவில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 90PS/113Nm அவுட்புட்டை உருவாக்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஐந்து-வேக AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே எஞ்சின் சிஎன்ஜி மாடலில் 77.49PS பவரையும் 98.5Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை மட்டுமே கிடைக்கிறது.


இதன் 1.2-லிட்டர் எம்டி லிட்டருக்கு 22.35 கிலோமீட்டர், ஏஎம்டி லிட்டருக்கு 22.94 கிலோமீட்டர் மற்றும் எம்டி சிஎன்ஜிMT மாறுபாடு 30.61 km/kg ஐ வழங்குகிறது.


மேலும் படிக்க | Car Care Tips: பெட்ரோல் காரில் தவறாக டீசலை நிரப்பிவிட்டால் என்ன செய்வது? 


Maruti Suzuki Baleno:அம்சங்கள்


இந்த காரில் வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய ஒன்பது இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோலுடன் கூடிய ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற அம்சங்கள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இது ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX ஆங்கரேஜ்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.


Maruti Suzuki Baleno: இதன் விலை எவ்வளவு?


டெல்லியில், மாருதி பலேனோவின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.61 லட்சத்தில் இருந்து ரூ.9.88 லட்சத்துக்கு இடையில் உள்ளது. 


எந்த காருடன் போட்டி?


மாருதி பலேனோ 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட டாடா அல்ட்ராஸுடன் போட்டியிடுகிறது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.45 லட்சமாகும்.


மேலும் படிக்க | Tata Tigor CNG: அடேங்கப்பா!! வெறும் ரூ. 86,000 செலுத்தி அட்டகாசமான இந்த காரை ஓட்டிச்செல்லலாம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ