Maruti Suzuki Car Price: மாருதி நிறுவனம் அளித்த ஷாக், கார்களின் விலை உயர்ந்தது

Maruti Suzuki Car Price Hike: ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளின் பாதிப்பை ஓரளவு ஈடுகட்ட ஏப்ரலில் அதன் மாடல்களின் விலைகளை உயர்த்துவதாக மாருதி சுசுகி இந்தியா (எம்எஸ்ஐ) சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 3, 2023, 10:56 AM IST
  • மாருதி சுஸுகி தனது வாகனங்களின் விலையை ஏப்ரல் 1, 2023 முதல் உயர்த்தியுள்ளது.
  • ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகனங்களின் விலை 5 சதவீதம் உயரும்.
  • ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் நுழைவு நிலை காம்பாக்ட் செடான் அமேஸின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
Maruti Suzuki Car Price: மாருதி நிறுவனம் அளித்த ஷாக், கார்களின் விலை உயர்ந்தது title=

மாருதி சுசுகி கார்கள் விலை உயர்வு: இந்த புதிய நிதியாண்டில் நீங்கள் வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி உள்ளது. மாருதி சுஸுகி தனது வாகனங்களின் விலையை ஏப்ரல் 1, 2023 முதல் உயர்த்தியுள்ளது. மாருதி நிறுவனத்தின் வாகனங்களின் விலை 0.8 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைக்கு ஏற்ப நிறுவனம் எந்த மாடலின் விலையை எவ்வளவு உயர்த்தியுள்ளது என்ற கணக்கீடு செய்யப்படுகிறது. புதிய விலை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என நிறுவனம் செய்திருந்த எக்ஸ்சேஞ்ச் ஃபைலிங் ஒன்றில் தெரிவித்திருந்தது.  

"ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளின்" பாதிப்பை ஓரளவு ஈடுகட்ட ஏப்ரலில் அதன் மாடல் வரம்பின் விலைகளை உயர்த்துவதாக மாருதி சுசுகி இந்தியா (எம்எஸ்ஐ) மார்ச் 23 அன்று அறிவித்தது.

மாருதி சுஸுகியின் சில மாடல்களின் விலைகள் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)

மாடல் புது டெல்லியில் எக்ஸ்-ஷோரூம் விலை
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ரூ.6 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
மாருதி சுஸுகி பலேனோ 8.3 லட்சத்தில் தொடங்குகிறது
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ரூ.12.85 லட்சத்தில் தொடங்குகிறது
மாருதி சுஸுகி வேகன் ஆர் ரூ.5.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
மாருதி சுஸுகி டிசையர் ரூ.6.44 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

மேலும் படிக்க | அடேங்கப்பா! விற்பனையில் வரலாறு படைத்த மாருதி சுசூகி ஈக்கோ கார் 

பணவீக்கம் காரணமாக, வாகங்களின் விலையில் தாக்கம் ஏற்படுகின்றது என்றும், ஒழுங்குமுறை தேவையை கருத்தில் கொண்டு, நிறுவனம் வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. விலையைக் குறைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், ஆனால் விலையை அதிகரிக்க வேண்டியது தற்போது அவசியமாக உள்ளது என்றும் நிறுவனம் மேலும் கூறியது.

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன

ஹீரோ மோட்டோகார்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் விலையை ஏப்ரல் 1, 2023 முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது. 2 சதவீதம் வரை விலை உயரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர, ஏப்ரல் 1ம் தேதி முதல் டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகனங்களின் விலை 5 சதவீதம் உயரும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வணிக வாகனங்களின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஐந்து சதவீதம் உயர்த்துவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

ஹோண்டா அமேஸும் விலை உயர்ந்தது

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் நுழைவு நிலை காம்பாக்ட் செடான் அமேஸின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த வாகனத்தின் விலை 12000 ரூபாய் அதிகரிக்கப்படும். மாசு உமிழ்வு விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளதால், உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், வாகனத்தின் விலையை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாடலின் வெவ்வேறு டிரிம்களில் நிறுவனம் வெவ்வேறு விதமாக விலையை உயர்த்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Tata Tigor CNG: அடேங்கப்பா!! வெறும் ரூ. 86,000 செலுத்தி அட்டகாசமான இந்த காரை ஓட்டிச்செல்லலாம்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News