புதிய மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன்; ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியீடு
மோட்டோ ஜி52 மொபைல் போன் இந்தியாவின் மிக மெல்லிய மற்றும் இலகுவான தொலைபேசி என்று மோட்டோரோலா கூறியுள்ளது.
லெனோவாக்கு சொந்தமான ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா மற்றொரு புதிய ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி52 ஐ அறிமுகப்படுத்த உள்ளது. மோட்டோ ஜி52 ஏப்ரல் 25 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இந்த போன் விற்பனை செய்யப்படும். பிளிப்கார்ட்டில் மோட்டோ ஜி52 மொபைல் போனுக்கான மைக்ரோ தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. பல சிறப்பான அம்சங்களைக் கொண்ட இந்த போனின் விலை சுமார் ரூ.20,000 என்று கூறப்படுகிறது. இந்த போன் இந்தியாவிற்கு முன்பே ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி52 மொபைல் போன் இந்தியாவின் மிக மெல்லிய மற்றும் இலகுவான தொலைபேசி என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த போனின் தடிமன் 7.88 மிமீ மற்றும் அதன் எடை 169 கிராம். தொலைபேசியின் அளவு 160.98×74.46×7.99மிமீ ஆகும். இது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வருகிறது.
மேலும் படிக்க | பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Truecaller; இந்த வசதி நிறுத்தப்படும்
pOLED பஞ்ச் ஹோல் டாட் டிஸ்ப்ளே
மோட்டோ ஜி52 6.6-இன்ச் முழு எச்டி+ pOLED பஞ்ச் ஹோல் டாட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. பட்ஜெட் ரேஞ் ஸ்மார்ட்போனில் pOLED டிஸ்ப்ளே இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில், 4ஜிபி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்படலாம். மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் சேமிப்பகத்தை அதிகரிக்கலாம். மோட்டோ ஜி52 போனில் டிரிப்பிள் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சாராக 50எம்பி மெகாபிக்சல் கேமரா, உடன் 8எம்பி மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16எம்பி மெகாபிக்சல் எப்/2.4 கேமரா டிஸ்ப்ளே டாட் நாட்சில் பொருத்தப்பட்டுள்ளது. பேஸ் பியூட்டி போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செயலி உள்ளது. இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. இதனை ஊக்குவிக்க 30வாட் பாஸ்ட் சார்ஜர் போனுடன் வழங்கப்படுகிறது. டைப்-சி போர்ட், ப்ளூடூத் 5.1, 3.5மிமீ ஆடியோ ஜாக்,என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுடன் மோட்டோ ஜி52 போன் இருக்கிறது. 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வேரியன்டின் விலை ரூ.20,999 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 25, 2022 அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி அட்டை வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன் வாங்க நீங்க ரெடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR