Moto tab g70 india launch today: Moto Tab G20 க்குப் பிறகு, மோட்டோரோலா இன்று இந்தியாவில் ஒரு புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனம் இன்று Moto Tab G70 LTE ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டேப்லெட் 11-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G90T செயலி மற்றும் குவாட்-ஸ்பீக்கர்களுடன் வருகிறது. Moto Tab G70 ஆனது WiFi+ LTE வேரியண்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதை தொலைபேசி மூலம் அழைப்பதற்கும் பயன்படுத்தலாம். Moto Tab G70 இன் அறிமுகம் பிளிப்கார்ட் (Flipkart)-க்கு மட்டும் பிரத்யேகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மோட்டோரோலா (Motorola) முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக Moto Tab G20 ஐ அறிமுகப்படுத்தியது. இருப்பினும், Moto Tab G70 சற்று பிரீமியம் வகையில் உயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பெரிய திரை மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. மோட்டோரோலா டேப் ஜி70 இன் விலை தொடர்பாக உள்ள எதிர்பார்ப்புகள் பற்றி இங்கு காணலாம். 


Moto Tab G70 India: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்


Moto Tab G70 இந்தியாவில் ரூ.21,999-க்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டார். பிரேசிலில், Moto Tab G70 LTE பதிப்பின் விலை BRL 2,399 (தோராயமாக ரூ. 28,000) ஆக இருந்தது.


ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.300க்குள் OPPO 5G ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு


Moto Tab G70: விவரக்குறிப்புகள்


Moto Tab G70 ஏற்கனவே பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகையால் இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகள் பற்றி ஏற்கனவே பல தகவல்கள் நம்மிடம் உள்ளன. Moto Tab G70 ஆனது 2,000x1,200 பிக்சல்கள் 400 nits உச்ச பிரகாசம் (peak brightness) கொண்ட 11 இன்ச் 2k டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டேப்லெட் MediaTek Helio G90T SoC உடன் இணைந்து 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜுடன் இயங்குகிறது. இதை microSD கார்டைப் பயன்படுத்தி விரிவாக்கிக்கொள்ளலாம். 


Moto Tab G70: கேமரா


கேமரா பிரிவில், Moto Tab G70 ஆனது 13-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் LED ஃப்ளாஷ்லைட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒற்றை கேமரா சென்சாரை பின்புறத்தில் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 


இணைப்பு வசதிக்காக, இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone) 4G LTE, 802.11 a/b/g/n/ac உடன் டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் v5.1, USB Type-C போர்ட் ஆகியவை உள்ளன. டேப்லெட்டில் இருக்கும் நான்கு-புள்ளி போகோ பின்னைப் பயன்படுத்தி டேப்லெட்டை கீ போர்டுடன் இணைக்க முடியும். Moto Tab G70 ஆனது Dolby Audio ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | விரைவில் வருகிறது மலிவு விலை 5G iPhone- முழு விவரம் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR