Motorola New Technology:  மோட்டோரோலா 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரூ வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தொழில்நுட்பத்தின் கீழ், போன் மற்றும் சார்ஜருக்கு இடையே எந்தவித நிஜ தொடர்பும் (Physical Connect) தேவை இருக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது மோட்டோரோலா (Motorola) அதன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக மோட்டோரோலா இந்த தொழில்நுட்பத்திற்கு 'மோட்டோரோலா ஒன் ஹைப்பர்' என்று பெயரிட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்து அதன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுடன் தொடர்புடைய பெயரை பிராண்ட் மோட்டோரோலா பயன்படுத்துவது இல்லை. ஆகையால், நிறுவனம் பெயரை 'மோட்டோரோலா ஏர் சார்ஜிங்' என்று மாற்றியுள்ளது.


சியோமி மி ஏர் சார்ஜ் போல வேலை செய்யும்


மோட்டோரோலாவின் ட்ரூ வயர்லெஸ் சார்ஜிங் ஒரு புதிய பெயரைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், இது 'சியோமி மி ஏர் சார்ஜ்' போலவே இருக்கிறது, அதைப் போன்ற பயன்பாடுகளுக்கே இதுவும் பயன்படுத்தப்படுகின்றது. சியோமியின் (Xiaomi) சல்யூஷன் ஒரு கான்செப்ட் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: Motorola Moto G50: Budget விலையில் அசத்தலான 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்


ஒரே நேரத்தில் 4 சாதனங்களை சார்ஜ் செய்யும்


வீபோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மோட்டோரோலா ஏர் சார்ஜிங் தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் 4 சாதனங்களை சார்ஜ் செய்யும். இது 3 மீ மற்றும் 100 டிகிரி சுற்றளவில் வேலை செய்கிறது.


நிறுவனம், அதன் சல்யூஷன் 1600 ஆண்டெனாவைப் பயன்படுத்தி சாதனங்களை தொடர்ந்து ஸ்கேன் செய்கிறது என்று கூறுகிறது. இந்த நெட்வொர்க் அமைப்பு, ஒரு சுயாதீன சிப்செட் மற்றும் அல்காரிதம் ஆகியவற்றின் உதவியுடன், நிலையான சார்ஜிங்கை உறுதி செய்கிறது.


இதன் அறிமுகம் எப்போது?


காகிதம், தோல் மற்றும் இவற்றை ஒத்த பொருட்களின் மூலம் இந்த சார்ஜர் (Charger) வேலை செய்கிறது என்று மோட்டோரோலா கூறுகிறது. இருப்பினும், பாதுகாப்பிற்காக, உயிரியல் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் மனித இருப்பு கண்டறியப்படும்போது சார்ஜ் நிறுத்தப்படும். இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிக்கப்படும் என மோட்டோரோலா இன்னும் சொல்லவில்லை.


இந்த தொழில்நுட்பத்திற்கு பொறுப்பான நிறுவனமான GuRu Wireless, Inc. பற்றி நிறுவனம் எதையும் குறிப்பிடவில்லை என்பது மற்றொரு சுவாரசியமான விஷயமாகும். எனினும், இந்த சார்ஜரை மோட்டரோலோ விரைவில் அறிமுகம் செய்யும் என தொழில்நுட்ப நிபுணர்கள் நம்புகிறார்கள்.


ALSO READ: போனில் வங்கி கணக்கு குறித்த தரவுகள்; கணக்கு உள்ள பணம் காலியாகலாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR