பேட்டரி திறமைகளால் தனி புகழ் பெற்ற Motorola நிறுவனம், உலகின் முதல் 5G மொபைலான Moto Z3-னை அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் சிக்காகோவில் வெளியிடப்பட்ட இந்த Moto Z3-னை குறித்து இந்நிறுவனம் தெரிவிக்கையில்... இந்த மொபைல் ஆனது உலகின் முதல் 5G மொபைல் ஆகும். மேலும் இந்த மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் டிராகன் X50 மோடம் மற்றும் மில்லிமீட்டர் அலை கூறுகள் மொபைல் உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டும். மேலும் குவாட்டம் நிறுவனத்துடன் இணைந்து உறுவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் ஆனது புதிய மாற்றத்தினை கொண்டுவரும் என தெரிவித்துள்ளது.


6.1" தொடுதிரையுடன் வெளிவரும் இந்த Moto Z3 ஆனது முழு HD+ OLED வசதியினை கொண்டுள்ளது. அலுமீனியம் கோட்டிங்கு கொண்டுள்ள இந்த மொபைல் ஆனது 2.5D கொரிலா பாதுகாப்பு கண்ணாடியினையும் கொண்டு வெளியாகிறது.


Moto Z3 மொபைலின் சிறப்பம்சங்கள்...


  • 6.1" முழு HD தொடுதிரை

  • கோர்னிங் கொரிலா கண்ணாடி 3

  • முழு HD+, 2160 x 1080p திரைத்தெளிவு

  • ஆண்ட்ராய்ட் 8.1, ஓரியோ

  • Qualcomm Snapdragon 835  Processor

  • 4 GB RAM

  • 64 GB உள் நினைவகம்

  • 2 TB மைக்ரோ SD கூட்டக்கூடிய நினைவகம்

  • 12 MP f2.0 பின் கேமிரா

  • 8 MP   f2.0 முன் கேமிரா

  • கைரேகை ஸ்கேனர், Face Unlock

  • 3000 mAh பேட்டரி