Motorola Moto G60: 3,499 ரூபாய்க்கு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்
தரமான ஸ்மார்ட்போன் வாங்க உத்தேசித்து இருந்தீர்கள் என்றால் வெறும் 3,499 ரூபாய்க்கு அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு ஸ்மார்போனை நீங்கள் இப்போது வாங்கலாம்.
Motorola Moto G60 Discount: நல்ல ஸ்டோரேஜ் மற்றும் நல்ல கேமரா, பேட்டரி கொண்ட ஃபோனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், மோட்டோரோலாவின் மோட்டோ ஜி60 தான் இப்போது உங்களுக்கான சிறந்த டீல். அதற்கான காரணத்தை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த 108 எம்பி கேமரா ஸ்மார்ட்போனை வெறும் 3499 ரூபாய்க்கு நீங்கள் இப்போது வாங்க முடியும். இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் உண்மையான விலை சுமார் 21 ஆயிரம் ரூபாய். ஆஃபரில் இவ்வுளவு குறைவாக நீங்கள் வாங்கலாம்.
மேலும் படிக்க | Amazon Sale: ரூ.99-க்கு ரூ.12,000 ஆயிரம் மதிப்புள்ள Redmi 5G ஸ்மார்ட்போன்
Moto G60ஐ எங்கே வாங்கலாம்?
தற்போது இந்த போன் Flipkart-ல் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தள்ளுபடிகள் மற்றும் வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த போனை குறைவான விலைக்கு வாங்கலாம். குறைவான விலையில் சிறப்பான ஸ்மார்ட்போனை வாங்கும் விருப்பம் உங்களுக்கு இருந்தால் இந்த டீலை நீங்கள் தவறவிடக்கூடாது.
மோட்டோரோலா ஜி60 விலை
மோட்டோரோலா ஜி60-ன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வேரியண்டின் உண்மையான விலை ரூ.21,999. ஆனால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் 27 சதவீத தள்ளுபடியுடன் இதை வாங்கலாம். இந்த சலுகைக்குப் பிறகு, ரூ.15,999 விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர Axis Bank கார்டிலிருந்து ஃபோனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி கூடுதலாக கிடைக்கும். மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.
மோட்டோரோலா சிறப்பம்சம்
Moto G60 ஸ்மார்ட்போன் வெளியிட்டாக இருக்கும். 225 கிராம் எடை, 9.8 மிமீ தடிமன் இருக்கும். 6.8 இன்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 6,000mAh பேட்டரி இருப்பதால், வெளிட்டுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதேநேரத்தில் பேட்டரியின் பேக்கப் உங்களுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்டாக இருக்கும். 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய முழு HD+ பேனலைக் கொண்டுள்ளது. அனிமேஷன் மற்றும் கேமிங்கிற்கு ஏற்றது. 6GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும்.
மேலும் படிக்க | உளவு பார்க்க பயன்படுத்தப்படும் Air Tag - அதிர வைக்கும் டெக் உலகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR