ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமானது ஏர்டேக் (Air Tag). பொருட்கள் தொலைந்து போகாமல் இருக்கவும், தொலைந்துபோன பொருட்களை எளிதாக கண்டுபிடிக்கவும் இந்த சாதனத்தை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். ஏர்டேக்கை, குறிப்பிட்ட பொருளின் மீது ஒட்டவைத்துவிட்டால் அல்லது பேக்குகளில் வைத்துவிட்டால், அந்த பொருள் எங்கிருந்தாலும் ஆப்பிள் போன் உதவியுடன் துல்லியமாக கண்டுபிடித்துவிடலாம். ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பாக இருந்தாலும், காயின் வடிவில் இருக்கும் இந்த ஏர்டெக் சாதனம் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த சாதனத்தால் குற்றச் செயல்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. ஒருவரை உளவு பார்க்கவும், குறிப்பிட்ட நபரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கவும் இந்த சாதனம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. அண்மையில், தன்னை ஏமாற்றிய காதலை ஏர்டேக் மூலம் கண்காணித்த காதலி, அவர் இருக்கும் இடத்துக்கு தேடிச் சென்று கொலை செய்துள்ளார். அமெரிக்காவில் இந்த வகையிலான டிராக்கிங் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க | Hacking: புதிய வழியில் வாட்ஸ்அப் ஹேக்கிங் - உஷார் மக்களே!
டிஸ்னி லேண்டிற்கு சுற்றுலா சென்ற பெண்களை, ஏர்டேக் மூலம் யாரோ ஒருவர் கண்காணித்துள்ளார். இதனை அந்தப் பெண்கள், தங்கள் ஆப்பிள் போன் மூலம் கண்டுபிடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏர்டேக் சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், பாதுகாப்பு காரணங்களுக்காக அருகாமையில் அல்லது உங்களது உடமைகளில் வேறொரு ஏர்டேக் இருந்தால் ஆப்பிள் போனில் நோடிபிகேஷன் காட்டும் எனத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உங்களை கண்காணிப்பதற்காக யாரேனும் ஏர்டேக்-ஐ பயன்படுத்தினால், அதனை நீங்கள் எளிமையாக கண்டுபிடித்துவிட முடியும்.
இப்படியான பாதுகாப்பு அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் கொடுத்திருந்தாலும், சமூகவிரோதிகள் ஆப்பிள் போன் இல்லாதவர்களை கண்காணிக்க பயன்படுத்தினால் என்ன செய்வது? என்ற கேள்வியை சில நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஏர்டேக், தனிநபர் உளவு டிராக்கராக மாறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | Twitter Aims High: மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து முன்னேறும் டிவிட்டர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR