சனிகிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசாவின் காசினி விண்கலம் தனது பயணத்தின் இறுதி மணி நேரங்களில் பயணிக்க தொடங்கி உள்ளாதாக நாசா அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


சனிகிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் 2004-ம் ஆண்டு நிலைநிறுத்தப்பட்ட காசினி 13 ஆண்டு கால பயணத்தில் சனிகிரகத்தை பற்றி பல்வேறு விபரங்களை உலகிற்கு வழங்கியுள்ளது.



இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்த விண்கலம் மணிக்கு 1,20,000 கிமீ வேகத்தில் பயணித்து வெடித்து சிதறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



சனிகிரகத்துக்கும் பூமிக்கும் இடையில் 1.4 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவு உள்ளதால் அங்கிருந்து பெறக்கூடிய ரேடியோ தொடர்பு அலைகள் 83 நிமிடம் தாமதமாகவே கிடைக்கப்பெறும் என்பதனாலே இந்திய நேரப்படி மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் நிகழும் என கூற்ப்படுகின்றது. இதனை நேரலையாக நாசா தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் ஒளிபரப்பட உள்ளது.



இந்நிலையில் இன்று இந்திய நேரம் படி மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் நிகழும் காட்சியை நேரலையாக நாசா தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் ஒளிபரப்பட உள்ளது.