நெட்பிளிக்ஸில் இனி பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவ்வளவுதான்...
நண்பர்களிடம் இருந்து பெற்ற பாஸ்வேர்டை பயன்படுத்தி நெட்பிளிக்ஸில் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது.
நெட்பிளிக்ஸ் தளம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு மொழித் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், வெப் சீரிஸ்களை உள்ளடக்கிய பிரபல ஓடிடி நிறுவனமாகும். அமெரிக்காவை அடிப்படையாக வைத்து இயங்கி வரும் நெட்பிளிக்ஸ் தற்போது அதன் பாஸ்வேர்டு பகிர்வு நடவடிக்கை தடுப்பதறகான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
நெட்பிளிக்ஸ் சந்தாவை நீங்கள் செலுத்தும்போது, உங்களுக்கு அளிக்கும் விதிமுறைகளிலேயே இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,"நெட்பிளிக்ஸிற்கு சந்தா கட்டுபவர்கள்தான், கணக்கு லாக்-இன் செய்யப்படும் டிவைஸ்களின் (மொபைல் அல்லது கணினி) எண்ணிக்கைக்கு பொறுப்பு. சந்தா கட்டுவோர் பிறருடன் பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ள கூடாது" என்பதை ஏற்கெனவே கூறப்பட்டிருந்தாலும், நெட்பிளிக்ஸ் இதை இத்தனை ஆண்டுகளாக பொதுவாக கண்டுகொண்டதில்லை.
உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து பெற்ற பாஸ்வேர்டை பயன்படுத்தி நெட்பிளிக்ஸில் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது.
மேலும் படிக்க | யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! மத்திய அரசின் கிடுக்குப்பிடி
நெட்பிளிக்ஸ் வரும் புத்தாண்டில் இருந்து பாஸ்வேர்டு பகிர்வதை முற்றிலும் தடுக்க திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளாக, நெட்ஃபிக்ஸ் சந்தாக்கள் குறைந்து வருவதற்கு பாஸ்வேர்டு பகிர்வு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களை தங்கள் தளத்தை விட்டு வேறு ஓடிடிக்கு செல்லாமல், இதனை மேற்கொள்ள நெட்பிளிக்ஸ் முயன்று வருகிறது. ஏனென்றால், தற்போது ஓடிடி தளங்கள் அதிகரித்துவிட்டன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெட்பிளிக்ஸ் இணை தலைமை நிர்வாகி ரீட் ஹேஸ்டிங்ஸ் தனது நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடம், கொரோனா தொற்றுநோய் காலகட்டம், பாஸ்வேர்டு பகிர்வு சிக்கலை மறைத்துவிட்டதாகவும், அதைச் சமாளிக்க அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் கூறினார்.
மேலும், குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து பாஸ்வேர்டு பெற்று, 100 மில்லியன் பார்வையாளர்கள் நெட்பிளிக்ஸில் படம் பார்க்கிறார்கள். ஆனால் இப்போது, நிறுவனம் 2023 முதல், கணக்குகளைப் பகிர்ந்துகொண்டால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்க உள்ளது என்று கூறியுள்ளார்.
நெட்பிளிக்ஸ் புத்தாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் இதுகுறித்த அப்டேட்டை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாகினும், நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களிடையே பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட நல்லெண்ணத்தை விட்டுக்கொடுப்பதாக அமையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ