யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! மத்திய அரசின் கிடுக்குப்பிடி

மத்திய அரசு திடீரென 104 யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது. போலி செய்திகளை பரப்பியதற்காக தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 24, 2022, 12:55 PM IST
யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! மத்திய அரசின் கிடுக்குப்பிடி title=

104 யூடியூப் சேனல்கள் உட்பட பல இணையதளங்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. 104 யூடியூப் சேனல்கள் மற்றும் 5 ட்விட்டர் கணக்குகள் மற்றும் 6 இணையதளங்கள் மீது நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சமூகத்தில் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்பியதற்காக ஐடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கமளித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது கேள்விகளுக்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவலை தெரிவித்தார். 

மேலும் படிக்க | ஜனவரி 2023 முதல் கூகுள் விதிகளில் மாற்றம்: இனி இவர்கள் கூகுள் க்ரோம் பயன்படுத்த முடியாது

அப்போது, நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சமூகத்தில் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்பும் விவகாரத்தில் இந்திய அரசு ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். இதுபோன்ற வழக்குகளில் இதுவரை 104 யூடியூப் சேனல்கள், 45 வீடியோக்கள், நான்கு பேஸ்புக் கணக்குகள் மற்றும் மூன்று இன்ஸ்டாகிராம் மற்றும் ஐந்து ட்விட்டர் கணக்குகள் மற்றும் 6 இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனுடன் இரண்டு செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற சமயங்களில் இந்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் எழுதுவதாகவும், அவர்கள் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும் தாக்கூர் கூறினார். தேவைப்பட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை மேலும், 3 சேனல்களை யூடியூப்பில் இருந்து நீக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. அந்த சேனல்களும் தவறான தகவல்களை பரப்பியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Jio மற்றும் Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ரீசார்ஜ் கட்டண விலை உயரலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News