நாட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் தங்களது எலக்ட்ரிக் டூவீலர்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. அதில் டார்க் கிராடோஸ் (Tork Kratos) என்ற புதிய இருசக்கர வாகனமும் சேர்க்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலெக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பு நிறுவ்னமான டார்க் மோட்டார்ஸ் (Tork Motors) , இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் கிராடோஸ் (Kratos) மற்றும் கிராடோஸ் ஆர் (Kratos R) என இரண்டு வகைகளில் கவர்ச்சிகரமான வடிவமைக்கப்பட்ட மற்றும் நீண்ட தூரம் அதிக மைலேஜ் தரும் மின்சார பைக்கை  (Electric Motorcycle) அறிமுகப்படுத்தியுள்ளது.


கான்செப்ட் மாடைலை விட பெருமளவு அப்டேட் செய்யப்பட்டு இருப்பதாக டார்க் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. முற்றிலும்  புது வடிவமைப்பு கொண்டிருக்கும் டார்க் கிராடோஸ் மோட்டார்சைக்கிளில், புதிதாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 


டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பைக்கில் பெருமளவு புதிய அம்சம் அப்டேட் செய்யப்பட்டு உருவாக்கியது மட்டுமல்லாமல், பிரீமியம் அம்சங்களுடன் ஸ்போர்ட் வடிவமைப்பையும் வழங்கியுள்ளது. இது பைக்கை மேலும் கவர்ச்சிகரமானதாக்கி உள்ளது. 


ALSO READ | Komaki Venice மின்சார ஸ்கூட்டர்: அசத்தும் அம்சங்கள், ஃபுல் சார்ஜில் 120 கிமீ


இந்த எலக்ட்ரிக் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி மற்றும் மோட்டார் எனர்ஜி பற்றி பேசுகையில், 4kWh, 48V திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பேக்அப் மற்றும் 28 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை உருவாக்கும் 7.5 Kw பவர் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த எலெக்ட்ரிக் பைக்கின் வீச்சு மற்றும் வேகத்தைப் பொறுத்தவரை, இந்த பைக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், மணிக்கு 100 கிமீ வேகத்தில் 180 கிமீ தூரம் வரை பயணம் செய்யலாம் என்று நிறுவனம் கூறுகிறது.


பைக்கின் வேகம் குறித்த நிறுவனத்தின் மற்றொரு முக்கிய கூற்று என்னவென்றால், இந்த பைக் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடும்.


ALSO READ | 1 முறை சார்ஜ் செய்தால் 200 KM போகலாம்; அற்புதமான பைக்


இந்த பைக்கை அறிமுகப்படுத்தியதுடன், நிறுவனம் அதன் முன்பதிவையும் தொடங்கியுள்ளது, இதற்கு நிறுவனம் முன்பதிவு தொகையாக ரூ.999 நிர்ணயித்துள்ளது.


நீங்கள் இந்த பைக்கை வாங்க விரும்பினால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று முன்பதிவு செய்யலாம், இந்த பைக்கை 2022 ஏப்ரல் மாதம் நிறுவனத்தால் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பைக்கின் விலையைப் பற்றி பேசுகையில், இந்த பைக்கின் புதிய டார்க் கிராடோஸ் பைக்கின் ஆரம்ப விலையை ரூ. 1.08 லட்சம் மற்றும் அதன் இரண்டாவது வகையான் புதிய டார்க் கிராடோஸ் ஆர் பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1.23 லட்சம் என நிர்ணயித்துள்ளது.


ALSO READ | பைக்-ஸ்கூட்டி வாங்க திட்டமா; பட்ஜெட்டுக்கு முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR