இனி ரயிலில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் உங்களுக்கு உறுதியாகக் கிடைக்குமா என்பதை இனி அப்போவே தெரிந்து கொள்ல இதை செய்யுங்கள் பாஸ்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள், உறுதியாகக் கிடைக்குமா என்பதை இனி உடனுக்குடனே தெரிந்துகொள்ளலாம். இதற்கான புதிய வசதியை ரயில்வே அமைச்சகம் IRCTC இணையதளத்தில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. 


ஒவ்வொரு முறையும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, டிக்கெட் இருப்பு இருக்கிறதா, முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் உறுதியாகக் கிடைக்குமா அல்லது காத்திருப்புப் பட்டியலிலே நீடிக்குமா என்ற குழப்பத்துடனேயே நாம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோம். 


இனி இந்த குழப்பம் உங்களுக்கு வேண்டாம் மக்களே!. முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படுமா என்பதை IRCTC இணையதளமே யூகித்துச் சரியாக சொல்லிவிடும். இந்த முறைக்கு ஏற்ப தற்போது IRCTC இணையதளம் புதிபித்துள்ளனர். 


இது குறித்து ரயில்வே அமைச்சக அதிகாரி கூறுகையில், 'IRCTC இணையதளத்தில் புதிதாக சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த, புதிய இணையதளச் சேவையின் மூலம் காத்திருப்புப் பட்டியலில் உள்ள தங்களது டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பயணிகள் உடனே தெரிந்து கொள்ள முடியும். 


அது மட்டுமல்லாமல், ஆர்.ஏ.சி டிக்கெட்டுகள் உறுதியாகும் வாய்ப்பையும் கணித்துக்கொள்ள முடியும். இந்தப் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில் சில சலுகைகளையும் ரயிவே துறை வழங்கியுள்ளது' என்றார். ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஓராண்டுக்கு முன்பே இந்தப் புதிய இணையதளச் சேவை பற்றிய யோசனையை அறிவித்து, இதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டிருந்தார். இதன் காலக்கெடு சென்ற ஆண்டு நிறைவடைந்தநிலையில், இப்போது தான் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறை, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது!