இந்திய இராணுவதுறை சார்ந்த தகவல்களை பெற  'ஹம்ராஸ்' எனும் மொபைல் செயலி ஒன்றை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. இச்செயலி மூலம் இராணுவ வீரர்கள் தங்களது பதவி மற்றும் பதவிஉயர்வு போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளமுடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த 'ஹம்ராஸ்' செயலி மூலம், வீரர்கள் தங்களது மாத சம்பள பட்டியல், படிவம் 16 போன்றவற்றையும் பதிவிறக்கம் செய்யமுடியும்.


ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வரவிருக்கும் இந்த செயலியானது இராணுவ பயன்பாட்டின் கீழ் இயங்கும். மேலும் இச்செயலி மூலம் ஜூனியர் ஆணையர் அதிகாரிகள் மற்றும் பிற நபர்களை உடனடியாக தகவல் தொடர்பு கொள்ள முடியும்.


பாதுகாப்பு காரணங்களுக்காக, இச்செயலியை பயன்படுத்த ஆதாரின் விவரங்களை சமர்பித்தல் அவசியமாகும். தேசிய தகவல் மையம் மூலம் ஆத்தர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை-கடவுச்சொல் அனுப்பப்படும்.


எனினும், இச்செயலியை பயன்படுத்த, ஆதாரின் விவரங்கலுடன் செயலியில் பதிவு செய்யப்படும் மொபைல் எண்ணும் இணைத்து இருத்தல் அவசியமா