இந்தியாவில் எப்போதுமே ராயல் என்ஃபீல்டுதான் மக்களின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் குறிப்பாக மலைகளில் பயணம் செய்ய விரும்புபவர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. சிலர் சொந்தமாக பைக்கை வாங்கி, சிலர் வாடகைக்கு எடுத்து மலையில் சவாரி செய்கின்றனர். ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த பைக்கை வாங்க விரும்புகிறார்கள். இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது நிறுவனம் தனது ரசிகர்களுக்காக மேலும் சில புதிய புல்லட்டுகளை கொண்டு வர தயாராகி வருகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் 350சிசி, 350சிசி மற்றும் 650சிசி பிரிவுகளில் வரலாம். இப்போதைக்கு கசிந்துள்ள தகவல்களின்படி, புதிய மோட்டார் சைக்கிள் 2024 இறுதியில் சந்தைக்கு வரலாம். 


மேலும் படிக்க |தோனிக்கு பிடித்த கேம்! பிளைட்டில் போகும்போதெல்லாம் விளையாடுவாராம்


1. கெரில்லா 450 


ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கெரில்லா 450 என்ற புதிய மோட்டார்சைக்கிளை சந்தையில் அறிமுகம் செய்ய ஆலோசித்து வருகிறது. இது 2024 இன் பிற்பகுதியில் அல்லது 2025 இன் தொடக்கத்தில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ட்ரையம்ப் ஸ்பீட் 400 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக வெளியிடப்படலாம். ராயல் என்ஃபீல்டின் கெரில்லா 450 இல் 17 இன்ச் அலாய் வீல்கள் காணப்படுகின்றன. 


2. கிளாசிக் 650 ட்வின்


ராயல் என்ஃபீல்டின் இந்த கிளாசிக் 650 ட்வினில் 648சிசி பேரலல் ட்வின் இன்ஜினைக் காணலாம். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி ஆற்றலில் 52 என்எம் டார்க்கை உருவாக்கும். இந்த மோட்டார்சைக்கிளை இன்டர்செப்டார் 650 மற்றும் சூப்பர் மீடியர் 650 இடைப்பட்டதாக இருக்கலாம்


3. புல்லட் 650


இவை தவிர, என்பீல்டு நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகும் மூன்றாவது மோட்டார்சைக்கிளின் பெயர் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650. மக்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350ஐ மிகவும் விரும்பினர். இந்த மோட்டார் சைக்கிள் நன்றாக விற்பனையானது. இதைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் இப்போது புல்லட் 650 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வரவிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் 648சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 47 பிஎச்பி ஆற்றலில் 52 என்எம் டார்க்கை உருவாக்கும்.


மேலும் படிக்க | இந்திய தயாரிப்பில் Range Rover கார்கள்... விலையும் தாறுமாறாக குறைந்தது - வாங்கும் ஐடியா இருக்கா...?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ