New SIM Card Rules: சிம் கார்டுகளை வாங்குவதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் அல்லது வோடபோன்-ஐடியாவின் புதிய சிம் வாங்க நினைக்கும் பயனர்கள் இனி கேஒய்சி நடைமுறையை எளிதாக பூர்த்தி செய்யலாம். தொலைத்தொடர்புத் துறை (DoT) கேஒய்சி நடைமுறை விதிகளை முற்றிலும் பேப்பர்லெஸாக (Paperless) மாற்றியுள்ளது. தொலைத்தொடர்பு துறையின் இந்த புதிய விதியின் மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட ஆவணங்களை தவறாக பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் தடுக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய சிம் கார்டை வாங்க விரும்புபவர்கள் அல்லது தங்கள் எண்னை வேறொரு நிறுவன சிம்மாக போர்ட் செய்வதன் மூலம் ஆபரேட்டரை மாற்றத் திட்டமிட்டு வருபவர்கள், இனி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் (Telecom Companies) அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. சிம் கார்டை பெற தேவையான ஆவணங்களை நீங்களே வெரிஃபை செய்ய முடியும். இதற்கு உதவும் வகையில் சிம்கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு துறை மாற்றி அமைத்துள்ளது.


பயனர்கள் தங்கள் எண்ணை ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற்றுவதற்கு கூட டெலிகாம் ஆபரேட்டர்களின் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. இதற்கு பயனர்கள் இப்போது OTP அடிப்படையிலான சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் புகைப்படத்தின் நகல் அல்லது அடையாள ஆவணங்களின் நகல் என எதையும் பகிராமல் புதிய சிம் கார்டை வாங்க முடியும்.


புதிய சிம் கார்டு வாங்கும் செயல்முறையை DoT எளிதாக்கியுள்ளதன் காரணமாக பயனரின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்தும் நீங்கும். தொலைத்தொடர்புத் துறையின் முழுமையான டிஜிட்டல் செயல்முறை பயனர்களின் ஆவணங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதோடு, இனி யாருடைய பெயரிலும் போலி சிம்கள் வாங்கப்படுவதும் தடுக்கப்படும். 


மேலும் படிக்க | பிளிப்கார்ட் பண்டிகை கால சலுகை... ஸ்மார்போன், டிவிக்களுக்கு 80% வரை தள்ளுபடி


தொலைத்தொடர்புத் துறை (DoT) சிம் கார்டுகளுக்கான புதிய விதி குறித்து அதிகாரப்பூர்வ X கணக்கில் இட்ட பதிவு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. சிம் கார்டின் புதிய விதி குறித்து, தொலைத்தொடர்புத் துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், பயனர்களுக்கான கே ஒய் சி நடைமுறையை எளிதாக்கும் முயற்சியாக, தொலைத்தொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது என்றும், இப்போது e-KYC (Know Your Customer) மற்றும் self KYC முறை பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பதிவிட்டுள்ளது. மேலும், புதிய சிம் கார்டை வாங்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ளுமாறு பயனர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


ஆதார் அடிப்படையிலான e-KYC மற்றும் Self-KYC என்றால் என்ன?


KYC நடைமுறையில் ஆதார் அடிப்படையிலான e-KYC, Self KYC ஆகியவற்றுக்கு OTP அடிப்படையிலான சேவை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை DoT அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சிம் கார்டை வாங்க பயனர்கள் இனி ஆதார் அட்டையை மட்டுமே பயன்படுத்த முடியும். டெலிகாம் நிறுவனங்கள், பயனர்களின் ஆவணங்களுக்கு ஆதார் அடிப்படையிலான காகிதமில்லா சரிபார்ப்பு அம்சத்தைப் பயன்படுத்தும். இதற்கு கட்டணமாக ரூ.1 மட்டுமே (ஜிஎஸ்டியுடன்) செலவாகும்.


மேலும் படிக்க | UPI பரிவர்த்தனை வரம்பை ₹5 லட்சமாக அதிகரித்தது NPCI


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ