YouTube-ல் பணம் சம்பாதிக்க புதிய வழிகள்!
இனிமேல் YouTube shorts வீடியோக்களில் இன்ஸ்டாக்ராமை போல பல விதமான எடிட்டிங் ஆப்ஷன்களை கிரியேட்டர்களுக்கு YouTube வழங்க இருக்கிறது.
பலருக்கும் யூடியூப் தளமானது வருவாயை ஈட்ட உதவிகரமாக உள்ளது, ஒவ்வொருவரும் இதில் சேனல்களை தொடங்கி பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் கிரியேட்டர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளைச் சேர்க்க யூடியூப் திட்டமிட்டுள்ளது. சமீபகாலமாக யூடியூப் shorts வீடியோக்கள் மக்களை அதிகளவில் கவர்ந்து இருக்கிறது. இந்த வகையான shorts வீடியோக்கள் டிக்டாக் செயலியை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது ஆகும். ஆனால் இது எதிர்பார்த்ததை விட மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க | தடங்கலுக்கு வருந்துகிறோம்: தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மன்னிப்புக் கோரும் Twitter
மேலும் பயனர்களை கவரும் வகையில் யூடியூப் தற்போது shorts வீடியோக்களை புதிய வீடியோ எடிட்டிங் ஆப்ஷன்களையும் சேர்க்க சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் கிரியேட்டர்கள் சிறப்பான வகையில் shorts வீடியோக்களை உருவாக்க முடியும். மேலும் இந்த வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் வரும் தனிப்பட்ட கமெண்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலான அமசத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த அம்சம் இன்ஸ்டாகிராமின் “Reels Visual Replies” எவ்வாறு செயல்படுமோ அதனை போலவே யூடியூப்-ல் செயல்பட இருக்கிறது, இருப்பினும் இந்த மாசம் முதலில் டிக்டாக்-ல் தான் இருந்தது.
இதன் மூலம் நீங்கள் பதிவிடும் வீடியோவிற்கு யாரெனும் கருத்து தெரிவித்தால், அந்த நபருக்கு நீங்கள் வீடியோவுடன் பதிலளிக்கலாம், இன்ஸ்டாகிராம் போலவே கமெண்டுடன் ஸ்டிக்கரைச் சேர்த்தும் பதிலளிக்கலாம். இது மட்டுமல்லாது யூடியூப் அதன் பயனாளர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான சில கூடுதல் வழிகளையும் வழங்க இருக்கிறது. அவற்றில் ஒன்று BrandConnect, இதன் மூலம் பிராண்டட் கண்டென்ட்டுகளை உருவாக்க வேண்டும். மேலும் இதன் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியும் உருவாக்கப்படும்.
எந்தவகையிலான கன்டென்ட் அதிகளவிலான பார்வையாளர்களை கவர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நிறைய மக்கள் போராடுகிறார்கள் என்று யூடியூப் தெரிவித்துள்ளது. எனவே யூடியூப் புதிய கிரியேட்டர்களுக்கு இதுகுறித்த அறிவை வழங்க இருக்கிறது. எந்த வகையிலான கண்டென்ட்டுகள் மக்களால் விரும்பப்படுகிறது, அதனை எவ்வாறெல்லாம் செய்யலாம் என்பதை தெரியப்படுத்த இருக்கிறது. இதனை தெரிந்து கொள்வதன் மூலம் கிரியேட்டர்களுக்கு புதிய ஐடியாக்கள் தோன்றும், இதன்மூலம் அவர்கள் வருவாயை ஈட்ட முடியும். மேலும் கிரியேட்டர்கள் அனைவரும் ஒன்றாக நேரலையில் உரையாடிக்கொள்ளும் அம்சத்தையும் வழங்க யூடியூப் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்குள் சில கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்டு ஒவ்வொருவருக்கும் பலவித புது ஐடியாக்கள் கிடைக்கும். இந்த தளம் விரைவில் "Gifted memberships" என்ற வசதியை தொடங்கவுள்ளது, இது livestream-ல் மற்றொரு பார்வையாளருக்கான சேனல் மெம்பர்ஷிப்பை வாங்கும் திறனைச் சேர்க்கும். இந்த அம்சம் தற்போது சோதனையில் இருந்துவருவதாகவும், இன்னும் சில மாதங்களில் இந்த அம்சத்தை பயனாளர்களுக்கு யூடியூப் செயல்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இன்ஸ்டாவில் இரண்டு புகைப்படத்தை ஒரே நேரத்தில் நீக்குவது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR