தடங்கலுக்கு வருந்துகிறோம்: தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மன்னிப்புக் கோரும் Twitter

தொழில்நுட்ப கோளாறால் டிவிட்டர் முடங்கியதால் நெட்டிசன்கள் வருத்தமடைந்தனர். அதற்கு மன்னிப்புக் கோரியது டிவிட்டர்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 12, 2022, 07:45 AM IST
  • தடங்கலுக்கு வருந்தும் டிவிட்டர்
  • தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மன்னிப்புக் கோரிய டிவிட்டர் செய்தி
  • ஒரு மணி நேரம் டிவிட்டர் இயங்கவில்லை
தடங்கலுக்கு வருந்துகிறோம்: தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மன்னிப்புக் கோரும் Twitter title=

புதுடெல்லி: சமூக ஊடகங்கள் தற்போது வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாகிவிட்டது. இன்று அனைவரும் கைப்பேசிக்குள் உலகம் அடங்கிவிட்டது என்று பெருமையாய் சொன்னாலும், தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரித்துவிடுகின்றன.

அதிலும் பிரபலமான டிவிட்டர் ஒரு மணி நேரம் செயல்படவில்லை என்றால், நெட்டிசன்கள், கப்பலே கவிழ்ந்துவிட்டதுபோல கவலையடைந்துவிடுகின்றனர். 

தொழில்நுட்பக் கோளாறுகள் அவ்வப்போது ஏற்படும் என்றாலும், அது ஏற்படுத்தும் கவலைகளோ மிகவும் அதிகம். நேற்று ட்விட்டரின் சர்வர் செயலிழந்தது, பயனர்கள் 1 மணிநேரம் கலக்கமடைந்தனர்.

பலரின் டிவிட்டுகள் பிரபலமானாலும், அதில் சிலரின் டிவிட்டர் இல்லை என்ற செய்தி பலராலும் பார்க்கப்பட்டது. 

அப்போது, டிவிட்டர் சர்வர் டவுன் என்ற வார்த்தையே ஹேஷ்டேக் போல பிரபலமான வார்த்தையானது.

அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் ட்விட்டரின் சர்வர் செயலிழந்தது. இந்தியாவில் இரவு 10.30 மணி முதல் ட்விட்டர் செயலிழக்கத் தொடங்கியது. இதனால் பயனர்கள் ட்வீட் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்தியாவில் சுமார் 1 மணி நேரம் ட்விட்டர் செயலிழந்தது, அதன் பிறகு அது சரி செய்யப்பட்டது.

downdetector.com படி, மக்கள் ட்விட்டரில் தொழில்நுட்ப சிக்கலைப் புகாரளிக்கத் தொடங்கினர். ட்வீட்கள் பதிவாகவில்லை. ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் முயற்சிக்கவும் (Something went wrong. Try reloading) என்ற பிழை செய்தியும் வந்தது.

மேலும் படிக்க | சீன விமான நிலையம் இந்தியாவிலா? அரசின் டிவிட்டர் பக்கம் செய்த குளறுபடி

ட்விட்டரில் டவுன்டெக்டருக்குப் புகாரளிக்கப்பட்ட 52% சிக்கல்கள் அதன் வலைத்தளத்துடன் தொடர்புடையவை, அதே நேரத்தில் 39% பயன்பாடு மற்றும் 9% சேவையகத்துடன் தொடர்புடையவை.

இந்த தொழில்நுட்பச் சிக்கல்களைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஆதரவுக் கணக்கு "காலவரிசையை ஏற்றுவதிலிருந்தும், ட்வீட்கள் இடுகையிடப்படுவதிலிருந்தும் ஒரு தொழில்நுட்பப் பிழையை நாங்கள் சரிசெய்துள்ளோம். இப்போது விஷயங்கள் நன்றாகச் செயல்படுகின்றன. தடங்கலுக்கு மன்னிக்கவும்!" என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டது. 

downdetector.com இல் 48,000 க்கும் மேற்பட்ட ட்விட்டர் டவுன் அறிக்கைகள் உள்ளன. இங்கிலாந்தில் ட்விட்டர் செயலிழந்ததாக அறிக்கைகள் மாலை 5 மணி முதல் வரத் தொடங்கின.

இதற்கு முன்னதாக, ஏர்டெல் நிறுவனத்தின் சேவைகள் நேற்று இந்தியா முழுவதும் முடங்கிய நிலையில், #AirtelDown? என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலானது. கொரோனா காலத்தில் கல்வியும் ஆன்லைனுக்கு விரவி வரும் நிலையில், மாணவர்களின் வகுப்புகளும் முடங்கின.  

மேலும் படிக்க | அஜித் மனைவி பெயரில் போலி டிவிட்டர் கணக்கு..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News