சீன ஸ்மார்போன் தயாரிப்பு நிறுவனமாக Xiaomi, தனது அடுத்த வரவான Redmi Note 8-ன் பர்ப்பல் வெர்சனை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெபுலா பர்பல் நிறத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், தற்போது இந்தியாவில் காஸ்மிக் பர்பல் மாறுபாட்டிலும் கிடைக்கிறது. தயாரிப்பாளர்களின் பரிந்துரையின் பேரில் இந்த ஸ்மார்ட்போன் நெப்ட்யூன் ப்ளூ, மூன்லைட் வொயிட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என்னும் மூன்று வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது. என்றபோதிலும் தலைமையகமான சீனாவில் இந்த Redmi Note 8 நான்கு கூடுதல் வண்ணங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாக கடந்த மாதம் Xiaomi, தனது Redmi Note 8-ன் வரிசைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக காஸ்மிக் பர்ப்பல் Redmi Note 8-ன் மோகம் இன்றளவும் இந்தியாவில் குறைந்தபாடில்லை. 



இந்நிலையில் தற்போது இந்த Redmi Note 8 -ன் புதிய வரவினை இந்தியாவில் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro இந்தியாவில் amazonindia.in மற்றும் mi.in வலைதளத்தில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இரண்டு வேறுபாடுகளில் கிடைக்கும் இந்த Xiaomi Redmi Note 8 ஆனது,... 4GB RAM + 64GB மற்றும் 6GB RAM + 128GB திறன்களில் இந்தியாவில் கிடைக்கிறது. இவை முறையே Rs 9,999 மற்றும் Rs 12,999. ஆகிய விலைகளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Xiaomi Redmi Note 8-ன் சிறப்பம்சங்கள் குறித்து பேசுகையில்., இது 6.2” LED முழு தொடுதிரையுடன் வெளியாகிறது. Qualcomm-ன் புகழ்பெற்ற Snapdragon 665 SoC பிராஸஸர் மற்றும் 6GB RAM, 128GB உள் நினைவகத்துடன் வெளியாகிறது. மேலும் உள் நினைவகத்தை நீட்டிக்க ஏதுவாக தனி நினைவக அட்டை பயன்படுத்தும் வசதியையும் கொண்டுள்ளது.



மூன்று பின் கேமிராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் 48MP primary lens, 8MP ultra-wide sensor, 2MP macro sensor ஆகிய லென்ஸ்களை கொண்டுள்ளது. அதேப்போல் முகப்பில் 13MP கேமிராவுடன் வெளியாகிறது. 


பேட்டரி திறன் பொருத்தவரையில் 4000mAh கொண்டு வெளியாகும் இந்த ஸ்மார்ட் போன் Android Pie இயங்குதளத்தில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.