Tecno Spark 7T: அசத்தலான் ஸ்மார்ட் போன், அதுவும் பட்ஜெட் விலையில்
டெக்னோவின் (Tecno) புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 7டி (Smartphone Tecno Spark 7T) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி: டெக்னோவின் (Tecno) புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 7டி (Smartphone Tecno Spark 7T) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட் போன், பட்ஜெட் விலையில் கிடைக்கிறது என்பது இன்னும் சிறப்பு. இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் AI ரியர் கேமரா, வீடியோ பொக்கே, டைம் லேப்ஸ், ஸ்லோ மோஷன், AI போர்ட்ரெய்ட், ஸ்மைல் ஷாட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொலைபேசியின் விலையும் மிகக் குறைவு.
விலை விபரம்
டெக்னோ ஸ்பார்க் 7டி (TECNO SPARK 7T) விலை ரூ.8,999. ஆனால் அறிமுக சலுகையான, ரூ .7,999 தள்ளுபடி விலையில் வாங்கலாம். கைபேசியின் விற்பனை ஜூன் 15 தொடங்குகிறது. மேக்னட் பிளாக், ஜுவல் ப்ளூ மற்றும் நெபுலா ஆரஞ்சு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கும்.
TECNO SPARK 7T - சிறப்பு அம்சங்கள்
இந்த தொலைபேசியில் Android 11 அடிப்படையிலான HiOS v7.6 வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, இது 6.52 இன்ச் எச்டி பிளஸ் டாட் நாட்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் ரெசல்யூஷன் 720x1600 பிக்சல்கள். டிஸ்ப்ளேயின் ப்ரைசட்நெஸ் 480 நிட்ஸ் ஆகும். தொலைபேசியில் மீடியாடெக் ஹீலியோ G35 ப்ராசஸர், 4 ஜிபி DDR4x RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, இதை மெமரி கார்டு உதவியுடன் 512 ஜிபி ஆகவும் அதிகரிக்க முடியும்.
ALSO READ | OnePlus Nord CE 5G: OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்
கேமிரா
டெக்னோவின் இந்த தொலைபேசியில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன, அவற்றில் முதன்மை லென்ஸ் 48 மெகாபிக்சல்கள், இதில் துளை ƒ / 1.8 உள்ளது. இரண்டாவது லென்ஸ் விஜிஏ மற்றும் மூன்றாவது ஏஐ லென்ஸ். குவாட் ஃபிளாஷ் லைட் கேமராவுடன் வழங்கப்படுகிறது. AI பியூட்டி மோட், ஸ்மைல் ஷாட், போர்ட்ரெய்ட், எச்டிஆர், 10 எக்ஸ் ஜூம் மற்றும் ஸ்லோ மோஷன் போன்ற பல அம்சங்கள் கேமராவுடன் கிடைக்கும். செல்ஃபிக்காக, இந்த தொலைபேசியில் இரட்டை ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
பேட்டரி
இந்த தொலைபேசி ஒரு பெரிய 6000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இதன் மூலம் 29 மணிநேர வீடியோ பிளேபேக்கை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் ட்ரிப்பிள் கார்ட் ஸ்லாட் கிடைக்கிறது, அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு சிம்களுடன் கூடவே ஒரு மெமரி கார்டையும் பயன்படுத்த முடியும். தொலைபேசியில் 2G,3G,4G LTE, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் ஆகியவை உள்ளன.
ALSO READ | Flipkart Big Saving Days Sale: மின்னணு சாதனங்கள், மொபைல் போன்களில் அதிரடி தள்ளுபடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR