நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது Nikon நிறுவனம் தனது அடுத்த படைப்பினை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

D3400 எனும் ஆரம்பநிலை புகைப்பட கலைஞர்களுக்கான கேமிராவினை இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டப் பின்னர் தற்போது D3500 எனும் கேமிராவினை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.


முந்தைய பதிப்பினை விட சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு இந்த புதிய பதிப்பு கேமிரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி D3400-னை விட எடையில் குறைந்ததாகவும், அளவில் சிறியதாகவும் D3500 உறுவாக்கப்பட்டுள்ளது. மேலும், D3500 ஆனது திறன் மிக்க பேட்டரிகளை கொண்டு வருவதால், ஒரு முறை சார்ஜ் செய்தால் 1550 புகைப்படங்கள் வரை எடுக்கும் வல்லமை கொண்டுள்ளது.


இந்த D3500 ஆனது 24.2MP பிக்சல் கவுட் திறனும், 100–25600 வரையிலான ISO திறனும் கொண்டு வெளியாகிறது. D3500-ன் வடிவமானது D5600-ன் ஒத்த வடிவமைப்பினை கொண்டு வெளியாகிறது என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 


செயல்பாட்டு கட்டுப்பாடுகள் பொத்தான்களுக்கென ஒரு புதிய அமைப்பினை கொண்டு இந்த கேமிரா வெளியாகிறது. மேலும் ஆரம்ப நிலை புகைப்பட கலைஞர்கள் பயன்படுத்த ஏதுவாக அனைத்து வசதிகளும் பொறுத்தப்பட்டு இந்த கேமிரா வெளியாகுவதால் அனைவரும் இந்த இயந்திரத்தினை பயன்படுத்தலாம் என இந்நிறுவனம் தெரிவிக்கின்றது.


இத்தனை அம்சங்களுக்கு மத்தியில் இந்த D3500 ஆனது SnapBridge மற்றும் Bluetooth வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்த D3500-ல் எடுக்கப்படும் புகைப்படமானது உடனடியாக பயனர்களின் ஸ்மார் போனுக்கு சென்றுவிடம். ஸ்மார்ட்போன் பறிமாற்றம் வசதியினை அடுத்து Nikon Image Space வசதியினை கொண்டும் பயனர்கள் தங்களது புகைப்படங்களை உடனடியாக தங்களது கணினிகளில் அனுகலாம் எனவும் Nikon தெரிவித்துள்ளது!