BSNL Broadband: பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஏனெனில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் இணைப்பு நிறுவல் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. நீங்கள் ஒரு புதிய பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற திட்டமிட்டு இருந்தால், அதற்கான நிறுவல் கட்டணத்தை நிறுவனம் முழுமையாக ரத்து செய்துள்ளது. அதேசமயம் முன்பு நிறுவல் கட்டணம் மிக அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த மாற்றங்களைச் செய்து வருகிறது. அதேநேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை 31 மார்ச் 2023 வரை மட்டுமே என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். முன்னதாக, ஃபைபர் இணைப்புக்கு பயனர்கள் ரூ.500 செலுத்த வேண்டியிருந்தது. தற்போது காப்பர் இணைப்புக்கு ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் முதன்முறையாக இதுபோன்ற சலுகையை வழங்கியுள்ளது. இதில் நிறுவல் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: BSNL முக்கிய தகவல்: இந்த நாளில் துவங்கும் 4ஜி சேவை


பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி பேசுகையில், மிகவும் பிரபலமான சலுகை ரூ.399 ஆகும். இந்த திட்டத்தில் 1000ஜிபி வரை 30 எம்பிபிஎஸ் வேகம் கிடைக்கும். அதன் பிறகு வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இத்துடன் அன்லிமிடெட் காலிங் வசதியும் உள்ளது. பிஎஸ்என்எல் 449 பிராட்பேண்ட் திட்டத்தில், நீங்கள் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் 3300ஜிபி வரை டேட்டாவை பெறலாம்


பிஎஸ்என்எல் 1799 பிராட்பேண்ட் திட்டத்தை வாங்குவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக தரவு வேகம் சிறப்பாக இருக்கும் திட்டத்தை விரும்புபவர்களுக்கு, இந்த திட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும்.


மேலும் படிக்க: ரூ. 666 ரீசார்ஜ் பிளான்: 105 நாள் வேலிடிட்டி, தினமும் 2ஜிபி தரவு தரும் சூப்பர் திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ