டிஸ்ப்ளே இல்லாத லேப்டாப்... கண் முன் விரியும் மாயாஜாலம் - விலை என்ன தெரியுமா?
Sightful Spacetop G1: டெக் உலகில் முதல்முறையாக டிஸ்ப்ளே இல்லாத, அதாவது திரையே இல்லாத ஒரு லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Sightful Spacetop G1 Laptop: தினந்தினம் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. சமீப ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அதன் உச்சத்தை எட்டி வருகிறது. கல்வித்துறை, மருத்துவத்துறை சார்ந்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பதும் பெரியளவில் வளர்ந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, Augmented Reality, Virtual Reality சார்ந்த தொழில்நுட்பங்களும் சமீப காலமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது முதல்முறையாக டிஸ்ப்ளே இல்லாத, அதாவது திரையே இல்லாத ஒரு லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் டிஸ்ப்ளே இருக்காது, அதற்கு பதில் Augmented Reality சார்ந்த கண்ணாடி மட்டுமே வழங்கப்படுகிறது. இதுசார்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கண் முன் விரியும் 100 இன்ச் ஸ்கிரீன்
இஸ்ரேலிய நிறுவனமான Sightful இந்த டிஸ்ப்ளே இல்லாத, Augmented Reality கண்ணாடியை பயன்படுத்தி இயங்கும் லேப்டாப்பை உருவாக்கி உள்ளது. AR Laptop For Work என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் Sightful Spacetop G1 லேப்டாப்பை அந்த Augmented Reality கண்ணாடி உடன் இணைந்திருக்கும். அதன்மூலம் உங்கள் பார்வைக்கு 100-இன்ச் ஸ்கிரீன் தெரியும். அதில் நீங்கள் சிங்கிள் மானிட்டர் அல்லது மல்பிடிபிள் மானிட்டரை வைத்துக்கொள்ளலாம். மேலும், இந்த லேடாப்பில் USB-C போர்ட் உள்ளது, இதன்மூலம் உங்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் மானிட்டரையும் இணைத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!
AR கண்ணாடி, இரண்டு OLED ஸ்கிரீன் மற்றும் தலா ஒரு கண் பகுதிக்கு 1080p ரெஸ்சோல்யூஷன் உடனும், 90Hz ரெப்ரெஷ் ரேட் உடனும் வருகிறது. இந்த லேப்டாப் Qualcomm Snapdragon QCS8550 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் 16ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது.
யாருக்கு உதவும்...?
இந்த லேப்டாப் கேம்மர்கள் ஆகியோருக்கு சாதகமாக இருக்காது என்றாலும் இணையத்தை பயன்படுத்தவும், இ-மெயில் அனுப்பவும், உங்களுக்கான பிரசென்டேஷன் மற்றும் டாக்குமெண்ட்களை தயாரிக்கவும் என அன்றாட பணிகளில் உபயோகமாக இருக்கும். அந்த AR கண்ணாடியில் உள்-அமைக்கப்பட்ட மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் இருக்கும். இதனால் நீங்கள் மீட்டிங்கிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Apple Vision Pro மற்றும் Meta Quest 3 போன்று இந்த Sightful Spacetop G1 லேப்டாப் முன்னேறிய தொழில்நுட்பம் இல்லை. மேலும், இருப்பினும் இது ஒரு தனித்துவமான லேப்டாப்பாக விளங்குகிறது. பிளேன், ரயில் போன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் எளிமையாக பயன்படுத்த உதவும் எனலாம்.
விலை என்ன தெரியுமா?
தங்களுக்கு ஏற்ற வகையிலும் அந்த AR கண்ணாடியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த Sightful Spacetop G1 லேப்டாப் தற்போது முன்பதிவு மட்டுமே செய்யப்படுகிறது. 100 அமெரிக்கா டாலர் செலுத்தி இதனை நீங்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது வெறும் டெபாசிட் ஆகும், உங்களுக்கு அந்த லேப்டாப் வேண்டாம் என்றால் அந்த டெபாசிட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதன் விலை 1900 அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பு படி ரூ.1,58,575 ஆகும்.
இதில் தற்போது 200 அமெரிக்க டாலர் தள்ளுபடி செய்யப்படுவதால் 1700 அமெரிக்க டாலர் விலையில் நீங்கள் வாங்கலாம். அதாவது, இந்திய மதிப்பு படி ரூ.1,41,883 ஆகும். வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ