இந்தியாவில் 'நோக்கியா 6.1' ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் 6,999 -ஆக குறைக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது விலை குறைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், குறைக்கப்பட்ட விலையில் நோக்கியா இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


3GB RAM + 32GB சேமிப்பு மற்றும் 4GB RAM + 64GB சேமிப்பு என இரண்டு வகைகளில் வெளியான இந்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன்  630 எஸ் ஓ சி ப்ராசஸர், 3,000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.


நோக்கியா தளத்தில் மட்டுமே, இந்த குறைக்கப்பட்ட விலையில் விற்பனையிலுள்ள இந்த ஸ்மார்ட்போன், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையில் உள்ளது.


எனினும் இந்த விலை குறைப்பு அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் தளத்தில் எதிரொலிக்கவில்லை.


இந்த ஸ்மார்ட்போன் சென்ற ஆண்டு 16,999 ரூபாய் என்ற துவக்க விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விலை குறைப்பிற்கு முன்னதாக, நோக்கியா தளத்தில், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 10,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.