HMD Global  நிறுவனம் ஒரு நிகழ்வை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த நிகழ்வு ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறும். இந்த நிகழ்வில், நிறுவனம் G தொடரின் கீழ் நோக்கியா G10 மற்றும் நோக்கியா G20 ஐ அறிமுகப்படுத்தக்கூடும். இது தவிர, Nokia X தொடரின் கீழ், Nokia X10 மற்றும் Nokia X20 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படக்கூடும். மேலும், நிறுவனம் தனது 5G தொலைபேசியையும் அறிமுகப்படுத்தக்கூடும். இந்த நிகழ்வு ஏப்ரல் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவரக்குறிப்பு


அறிமுகத்துக்கு முன்னரே Nokia-வின் ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகள் பற்றி தெரிய வந்துள்ளது. இதன் படி Nokia G 10 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே இருக்கக்கூடும். இந்த தொலைபேசியை 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட இரண்டு வகைகளில் நாம் பெறக்கூடும். தொலைபேசியில் ஆக்டா கோர் சிப்செட் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமையில் இயங்குகிறது.


கேமரா


குவாட் கேமரா அமைப்பு மோட்டோ ஜி 10 ஸ்மார்ட்போனில் (Smartphone) வழங்கப்பட்டுள்ளது, இதன் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல்களைக் கொண்டிருக்கும். மேலும், 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி அல்ட்ரா வைட் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் இருக்கக்கூடும். அதே நேரத்தில், 16 எம்பி கேமராவை செல்ஃபியும் இதில் இருக்கும். 


ALSO READ: Realme ஸ்மார்ட்ஃபோன்களில் பம்பர் சலுகை: விலை, சலுகை விவரம் இதோ


4000mAh பேட்டரி


பவரைப் பொறுத்தவரை, இந்த நோக்கியா தொலைபேசியில் 4,000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படக்கூடும். இது 10W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும். இது தவிர, நோக்கியா எக்ஸ் 10 ஸ்மார்ட்போனை 5 ஜி ஆதரவுடன் அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. Nokia X10  மற்றும் Nokia X 20 தொலைபேசிகளில் ஸ்னாப்டிராகன் 480 5G செயலி பொருத்தப்படும். இந்த தொலைபேசி வெள்ளை மற்றும் பச்சை இரண்டு வண்ண ஆப்ஷன்களில் விருப்பங்களில் கிடைக்கும்.


Redmi Note 10 Pro Max உடன் போட்டி இருக்கும் 


Redmi Note 10 Pro Max 6.67 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது MIUI 12 அடிப்படையிலான Android 11 இயக்க முறைமையில் இயங்குகிறது. செயல்திறனுக்காக, குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி செயலி அதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு உதவியுடன் 512 ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.


Redmi Note 10 Pro Max ஒரு குவாட் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 108 மெகாபிக்சல்கள், இரண்டாம் நிலை 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மைக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரைக் கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. பவரைப் பொறுத்தவரை, தொலைபேசியில் 5020 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .21,999 ஆகும்.


ALSO READ: அசத்தும் அம்சங்கள், அதிரடி விலையில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் OPPO F19: விவரம் இதோ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR