அசத்தும் அம்சங்கள், அதிரடி விலையில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் OPPO F19: விவரம் இதோ

F19 Pro சீரிஸின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பின்னர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான OPPO, ஏப்ரல் 6 ஆம் தேதி F19 ஐ அறிமுகப்படுத்த முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2021, 06:43 PM IST
  • OPPO இந்த மாதத்திலும் ஒரு சிறந்த முதன்மை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
  • OPPO, ஏப்ரல் 6 ஆம் தேதி F19 ஐ அறிமுகப்படுத்த முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • நாகரீகமான மற்றும் ஸ்டைலான ஸ்மார்ட்போன்களைத் தேடும் இளைஞர்களுக்காக OPPO F19 வடிவமைக்கப்பட்டுள்ளது-OPPO.
அசத்தும் அம்சங்கள், அதிரடி விலையில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் OPPO F19: விவரம் இதோ title=

புதுடெல்லி: மொபைல் நிறுவனமான OPPO இந்த மாதத்திலும் ஒரு சிறந்த முதன்மை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.  அடுத்த வாரம் F19 சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொலைபேசியில் சிறந்த பேட்டரி மற்றும் மிசக்சிறந்த ப்ராசசர் வழங்கப்படுகிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

F19 Pro-வின் அம்சங்கள்

F19 Pro சீரிஸின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பின்னர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான OPPO, ஏப்ரல் 6 ஆம் தேதி F19 ஐ அறிமுகப்படுத்த முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. OPPO F19 ஃபிளாஷ் சார்ஜ் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் ஒரு சூப்பர் அமோல்ட் ஃபுல் எச்டி மற்றும் ஐந்து ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
33 வாட் ஃபிளாஷ் சார்ஜுடன், OPPO F19 வெறும் 72 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. இது 11 V 3 A சல்யூஷனில் இயங்குகிறது. நிறுவனம் ஒரு அறிக்கையில், "நாகரீகமான மற்றும் ஸ்டைலான ஸ்மார்ட்போன்களைத் தேடும் இளைஞர்களுக்காக OPPO F19 வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை பயனர்களின் அனுபவத்தை மிகவும் திருப்திகரமாக இருக்க வைக்கும்” என்று தெரிவித்துள்ளது. 

ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் சமீபத்திய சலுகைகள் குறித்து பேசினால், OPPO தொழில்துறையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் F19 Pro Plus பிளஸ் 5 ஜி மற்றும் F19 Pro Plus ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய சந்தையில் குவாட் ரியர் கேமரா மற்றும் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளேவுடன் கிடைக்கிறது.

ALSO READ: Realme ஸ்மார்ட்ஃபோன்களில் பம்பர் சலுகை: விலை, சலுகை விவரம் இதோ

OPPO F19 Pro Plus இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை 25,990 ரூபாயாகும். OPPO F19 Pro இன் விலை 21,490 ரூபாய் ஆகும். இந்த வகையில், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ .29,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதத்திலும் பல சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை (Smartphone) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது புதிய 5 ஜி தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன.

ALSO READ: இந்தியாவில் launch ஆனது Poco X3: அசத்தும் அம்சங்கள், நம்ப முடியாத விலை, விவரம் இதோ!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News