இந்தியாவில் அறிமுகமாகும் Nokia G60 ஸ்மார்ட்ஃபோன் - முழு விவரங்கள்
நோக்கியா நிறுவனத்தின் ஜி 60 5ஜி ஸ்மார்ட்ஃபோன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது.
ஒருகாலத்தில் நோக்கியா இல்லாத கைகளே இல்லை. மொபைல் ஃபோன்களில் நோக்கியா மிகப்பெரிய புரட்சி செய்தது என்றே கூறலாம். ஆனால் காலப்போக்கில் ஆண்ட்ராய்டு ஃபோன் வருகையால் நோக்கியா பின் தங்கியது. இருந்தாலும் தற்போது ஸ்மார்ட்ஃபோன் யுகத்தில் நோக்கியாவும் களமிறங்கிவருகிறது. அந்தவகையில் அந்த நிறுவனத்தின் சார்பில் ஜி60 5ஜி ஸ்மார்ட்ஃபோன் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச அளவில் அறிமுகமான இந்த மொபைலின் முக்கிய ஸ்பெஷாலிட்டி மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது ஆகும். நாட்டில் 5G சேவை துவக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 5G ஸ்மார்ட் ஃபோன் விரைவில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nokia mobile india தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பேஜில் வெளியிட்டுள்ள இது தொடர்பான ட்விட்டில், "120Hz ரெஃப்ரஷ் ரேட், 50MP டிரிபிள் AI கேமரா, ஹை-ஸ்பீட் 5G கனெக்டிவிட்டி தவிர பல ஆண்டுகளுக்கான சாஃப்ட்வேர் & ஹார்ட்வேர் சப்போர்ட் ஆகியவற்றுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக தயாராக உள்ளது" என குறிப்பிட்டுள்ளது. மொபைலை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக அந்த நிறுவனம் மொபைலின் வசதிகளை வெளிப்படுத்தும் வகையில் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் பட்டியலிட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட் ஃபோனின் வெளியீட்டு தேதி மற்றும் இந்திய விலை விவரங்களை பிராண்ட் இன்னும் வெளியிடவில்லை.
6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டு 2 கலர் ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் ஐஸ் என 2 கலர்களில் கிடைக்கும் என தெரிகிறது. Nokia G60 5G மொபைல் 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.58 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைலின் டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொட்டக்ஷனை கொண்டுள்ளது.
மேலும் படிக்க | ரூ. 21,000 அசத்தல் விவோ போனின் விலை வெறும் ரூ. 990: பிளிப்கார்ட் அதிரடி
டூயல் நானோ சிம் ஸ்லாட்டை கொண்டுள்ள இது ஆண்ட்ராய்டு 12-ல் இயங்குகிறது. இந்த 5G ஸ்மார்ட் போன் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 695 5G SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.20,000க்குள் இருக்கும் என தெரிகிரது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ